சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

46

‘வடுகரருவாளர்’என்பதூஉம்  சான்றோர்செய்யுள் அன்றாலெனின்,

1‘கடுஞ்சினத்த கொல்களிறுங்
கதழ்பரிய கலிமாவு,
நெடுங்கொடிய நிமிர்தேரும்
நெஞ்சுடைய புகன் மறவரும் என,
நான்குடன் மாண்டதாயினும்’

என்பதும் உண்மையின் அமையும் என்பது.

அஃதே     ‘திங்களுஞ் சான்றோரு மொப்பர்’  (நாலடி-)  எனவும்.
“வேந்தன்    பெரும்பதி    மண்ணாண்    மாந்தர்     ஈங்கிம்மூவர்
இதற்குரியாரே”  எனவுஞ்  சான்றோர் செய்யுளுள்ளும்  வருமாலெனின்
திங்களும்,  பதியும்  என்பன  அஃறிணை   முடிபினவெனினும்  தாம்
உயர்திணைப் பொருளவாகலின்.  அவை இந்நிகரனவல்ல. இவற்றின்கட்
சிறுபான்மை    வழுவினையும்   இப்பலவயினானும்    என்றதனாதல்
அதிகாரப் புறனடையானாதல் அமைத்தும் என்பது.

இதனாற்    சொல்லியது செய்யுட்கண் திணைவிரவி எண்ணியவழிப்
பொதுவாக  முடியாது  ஒரு  திணையான்  முடிவது  கண்டு  அதனை
அமைத்தவாறு.

இனிப்  பொது   முடிபிலவென்று   அஃறிணை  முடிபிற்றாதற்குக்
காரணம்    என்னோவெனின்   அவ்வாறெண்ணிய   உயர்திணையும்
பொருளென்னும்    பொதுமையான்    அஃறிணையின்    அடங்கும்.
உயர்திணையுள் அஃறிணை அடங்காது என்பது போலும்.        (51)

பலபொருள் ஒருசொல் இருவகை எனல
 
  

52.

வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல்
வினைவேறுபடா அப்பலபொருள் ஒருசொலென்
றாயிரு வகைய பலபொருள் ஒருசொல்.
 

என் - எனின்     மேற்    பல    சொல்லான்    வரும்    ஒரு
பொருளுணர்த்தினான்:    இனி    ஒரு   சொல்லான்   வரும்   பல
பொருளுணர்த்துவான்  அவற்றது   பெயரும்  முறையும் உணர்த்துதல்
நுதலிற்று.

(இ - ள்.) வினையினான் வேறுபடும் பலபொருள்  ஒரு  சொல்லும்,
வினையினான்   வேறுபடாத   பலபொருள்   ஒரு   சொல்லும்  என
இருவகைய பலபொருள் ஒருசொல், (எ - று.)

(எ - டு.)  மா, வாள், கோல், கன்று, தளிர், பூ, காய், பழம் என்னும்
தொடக்கத்தன. இவற்றுள் மா என்பதே பலசாதியு முணர்த்திப்


புறம்.-55: 7-9.