சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

57

பாரும் உளர். அல்லதூஉம்,   வேற்றுமை    என்பது   பன்மைபற்றிய
வழக்கெனினும் அமையும்.

இவ்வேற்றுமை  செய்யும் வழிப் பலசொல் ஒரு பொருளாகியும் பல
பொருள்  ஒரு சொல்லாகியும் வரும். இனிப் பலசொல் ஒருபொருளாகி
வரும்வழி,  பல  வேற்றுமை  பல சொல்லாகியும், ஒரு வேற்றுமை பல
சொல்லாகியும் வரும். அவையாமாறு அறிந்துகொள்க.

மேலோத்தினோடு   இவ்வோத்தியைபு என்னையோ எனின், மேல்
ஓத்தினுள்   நான்கு   வகைப்பட்ட   சொற்களையும்   பொருள்கண்
மேலாமாறு  சொல்லிப்  போந்தார். அவற்றுள் முதலது பெயர்ச்சொல்;
அதற்கு இலக்கணம் உணர்த்திய எடுத்துக் கொண்டார் என்பது.

யாங்ஙனம்  உணர்தினாரோ எனின், எல்லாப் பெயர்களும் எழுவா
யாகிப்   பயனிலை   கோடலும்,  ஒருவழி  எழுவாயாகாது  வேறோர்
நிலைமையவாய்   நிற்றலும்,   உருபேற்றலும்   ஒருவழிச்  சிலபெயர்
உருபேலாது   நிற்றலும்,  காலந்  தோன்றாமை  நிற்றலும்,  ஒருவழித்
தொழிற்பொருளொடு  கூறியக்கால் காலந்தோற்றி நிற்றலும், விளியேற்று
நிற்றலும்,  சில  பெயர்  விளியாது  நிற்றலும்,  இன்னோரன்ன  பிறவும்
பெயரது இலக்கண மென உணர்த்தினார் என்பது.

பொது இலக்கணமேயன்றி உருபிலக்கணம் உணர்த்தினாரல் எனின்,
அவ்வாராய்ச்சி    பெயரது    இலக்கணமாய்விடுதல்   உடைமையின்
அமையும் என்பது.

மற்று  இத்தலைச் சூத்திரம்  என்னுதலிற்றோ  எனின்,  தன்னால்
உணர்த்தப்படும் பொருளை இனைத்தென்று  வரையறுத்தல் நுதலிற்று.

(இ - ள்.)வேற்றுமை   என்று   சொல்லப்படுவனதாம் ஏழென்று
சொல்லுவர் ஆசிரியர், (எ - று.)

1தாம் என்பது சந்தவின்பம். ஏ என்பது ஈற்றசையாம் என்க.  (1)

விளியொடு கூட்ட வேற்றுமை எட்டெனல்
 

64.

விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே.
 

என் - எனின், ஒழிந்தவேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)விளிகொள்வதன்கண்  விளியோடு  எட்டு   வகைப்படும்
வேற்றுமை என்றவாறு.

விளிகொள்வது என்பது, பெயரின்கண் விளி என்றவாறு.

விளியோடு     எட்டு என்னாது பெயர்க்கண்  விளி  என்றதனால்
பெற்றது     என்னையெனின்,     மற்றை    வேற்றுமை    போலப்
பெயர்ப்புறத்துப் பிரிய


1தாம்  என்பது     கட்டுரைச்சுவை   பட    வந்தது   என்பர்
சேனாவரையர். கட்டுரைச் சுவை - சந்த இன்பம்.