சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

58

வராது, அப்பொருளே  ஈறுதிரிதல்,  முதலாய   வடிவினதாகி வருதல்
உணர்த்திய என்றவாறு.

‘வேற்றுமை தாமே எட்டு’  என  ஒரு  சூத்திர  மாகக்  கூறாதது
என்னை  யெனின்,  இது சிறப்பின்மை அறிவித்தற்கு வேறு  கூறினார்
என்பது.     யாதோ     சிறப்பின்மை     எனின்,     விளியேலாப்
பொருளுண்மையின்   என்பது.   அஃதேல்   பயனிலை   கொள்ளப்
பெயரும்  உளவெனின்,  அதனோடு  இதனிடை  வேற்றுமை  உண்டு.
அஃது  ஒருவழிக்  கொள்வது  ஒருவழிக் கொள்ளாதாய் நிற்கும். அது
தானுஞ் சிறுபான்மை. இஃது யாண்டுங் கொள்ளாவென கொள்ளாவாயே
நிற்கும் என்பது. இவ்வாறன்றி எல்லாஞ் சொல்லான் என்பதும் ஒன்று.

பல சொல்லும் உள எனினும், ஐ, ஒடு, கு, இன் அது, கண் என்பன
பெருவழக்கின   ஆகலின்  உருபினுள்  அவ்வாறனையுமே  கொண்டு
அவற்றோடு  எழுவாயினையும்  விளியினையுங் கூட்டி எட்டு  என்றார்
என்பது.                                                (2)

வேற்றுமைகளது பெயரும் முறையும
 

65.

அவைதாம்,
பெயர் ஐ ஒடு கு
இன் அது கண்விளி என்னும் ஈற்ற.
 

என் - எனின், வேற்றுமைகளது பெயரும் முறையும்  உணர்த்துதல்
நுதலிற்று.

(இ - ள்.)மேல் வேற்றுமை என்று சொல்லாப்பட்டவைதாம் பெயர்,
ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி இறுதியாக உடையன, (எ - று.)

அப்பெயர்     பெயர். அம்முறை :  எழுவாய்  வேற்றுமை ஏனை
வேற்றுமைக்கும்   சார்பாதல்   நோக்கி   முன்வைக்கப்பட்டது.  விளி
வேற்றுமை,  எல்லாவற்றினுஞ்  சிறப்பின்மை  நோக்கிப் பின் வைக்கப்
பட்டது.

ஐயினை  இரண்டாவதென்றும், ஒடுவினை மூன்றாவதென்றும்,  இவ்
வாறே  இவை  கூறுதற்குக்  காரணம்  உண்டோ  எனின், காரணமும்
இல்லை;  காரணம்  இல்லையேல்  வேண்டியவாறு கூறினும் அமையும்
எனின், அமையாது; முன்னூலுள் ஓதிய முறை அது வென்பது.     (3)

எழுவாய் வேற்றுமை
 

66.

அவற்றுள்,
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே.
 

என்  -  எனின்,    நிறுத்த   முறையானே    முதற்கண்   நின்ற
பெயர்வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று.