சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

59

(இ - ள்.) மேற்   சொல்லப்பட்ட  வேற்றுமை  எட்டனுள் முதல்
வேற்றுமையாவது  பெயர்ச்  சொல்,  பயனிலைப்பாடு தோன்ற நிற்கும்
நிலைமை, (எ - று.)

(எ - டு.) ஆ, மக்கள் எனவரும்.

விளியோடு  இதனிடை வேற்றுமை என்னை யெனின், ஈறுதிரிதலும்,
ஈறுதிரியாமையும்,   ஈறுதிரியாதவழி   ஒருவழிப்    படர்க்கையாதலும்,
முன்னிலை யாதலும் எனக் கொள்க.                          (4)

எழுவாய் பயனிலை ஏற்குமாறு
 

67.

பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினை நிலை உரைத்தல் வினாவிற் கேற்றல்
பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்
றன்றி அனைத்தும் பெயர்ப்பய னிலையே.
 

என் - எனின், மேற் சொல்லப்பட்ட எழுவாய் வேற்றுமை என்பது,
ஆறுவகைப்பட்ட பயனிலையும் ஏற்று நிற்பது என்றவாறு.

(இ - ள்.) பொருட்டன்மை   கருதிவரும்   வரவும்,   ஏவலைக்
கொள்ள வரும் வரவும், தனது தொழிலினைச் சொல்ல வரும்  வரவும்,
வினாவுதற்  பொருண்மைக்கு ஏற்று வரும் வரவும், தனது பண்பினைக்
கொள்ள  வரும் வரவும், என்று சொல்லப்பட்டவை யனைத்தும் வரும்
பெயர்ச்சொல்லது பயனாகிய நிலைமை, (எ - று.)

என்றது,     முதல் வேற்றுமையாவது இவ் ஆறு பொருண்மையுந்
தோன்ற  நிற்பது  என்றவாறு. அவ்வப் பொருண்மையை விளக்குவன
பின் வருஞ் சொற்கள் என்றவாறு.

பெயர்ப்     பயனிலை யென்றது பின் வருகின்ற சொற்களேயன்று,
அவ்வச்  சொல்லின்  பொருண்மையினைக்  குறித்த  பெயர்  நிற்கும்
நிலைமை வேறுபாடுகளை, (எ - று.)

நிலை   என்னாது பயனிலை என்றது அப்பெயர்களைக் கேட்பின்
இப்பொழுது  இப்பொருள்   இன்ன   நிலைமைத்து  என  உணரும்
உணர்ச்சிக்குப் பயன் பட நிற்கும் நிலைமைய என்றற்கு என்பது.

(எ - டு.)பொருண்மைசுட்டல் :  ஆ உண்டு  என்பது.  இதன்
பண்பு முதலியவற்றைக் கருதாது பொருட்டன்மையைக் கருதி நிற்றலால்
பொருண்மை  சுட்டல்  எனப்பட்டது.  உண்மை என்பது பண்பன்றோ
எனின்,  அன்று.  அப்பொருட்டன்மை என்பது போலுங் கருத்து. ஆ
இல்லை என்பதும் இதன்கட் பட்டடங்கும்.