சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

62

தொகைப் பெயரும் பயனிலை கொள்ளும் எனல்
  

68.

பெயரி னாகிய தொகையுமா ருளவே
அவ்வும் உரிய அப்பா லான.

 

என் - எனின்,   தனிப்பெயரேயன்றித்   தொகைப்  பெயர்களும்
பயனிலை கொள்ளும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)   இரண்டு பெயர்ச்சொன் முதலாக வுளவாகிய தொகைச்
சொற்களும் உள, (எ - று.)

(எ - டு.) யானைக் கோடு உண்டு, செல்க, வீழ்ந்தது, பெரிது பல
என வரும். இவை பெயரினாகிய தொகை.

கொல்யானை உண்டு, செல்க, வீழ்ந்தது, யாது  பெரிது,  பல என
இவை வினையினாகிய தொகை.

தொகையும்     பயனிலை கொள்ளும் என்கின்றமையின் இவையும்
எழுவாயாகற்பால  பிற;  அதற்கு  விதியாதோ  எனின், எச்ச வியலுள்
“எல்லாத் தொகையும்” என்னும் சூத்திரத்துக் கூறப்படும் என்பது.  (6)

பெயர்கள் அனைத்தும் பயனிலை கொண்டுவரும்
என்றல்
  

69.

எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப.

 

என் - எனின், பெயர் உருபேற்கும்  வழிப்படுவதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  எவ்விடத்துப்    பெயரும்  விளங்கத்தோன்றி  மேற்
சொல்லப்பட்ட   வேற்றுமையாய்ப்   பயனிலைகொள்ளும்  இயல்பின்
கண்ணே நிற்றல் செவ்விது என்று சொல்லுப ஆசிரியர் என்றவாறு.

மேற்காட்டின இவ்விதி 1மேல்பெற்றாமன்றோ எனின், மேல்  பெற்ற
தனையே   ஈண்டும்   தந்து  வலியுறுத்தார்  பிறிதொன்று  விளக்கிய
என்பது.  அஃது  யாதோ எனின், பயனிலை ஏற்றலிற் செவ்விது  என,
உருபேற்றலும்   பெயர்க்கு   இலக்கணமன்றே,   அதனிற்  செவ்விய
ஆகாதனவும் உள என்பது.

நீயிர் என்பது பெயர். நீயிரை உன உருபேலாது. இது நும் என்னும்
பெயர்  அவ்வழிப்  புணர்ச்சித்திரிபு என்றது. உம்மை என உருபேற்கு
மால்  எனின்,  பிற  சந்தித்திரிபு போல  நிலைமொழி  நிலைதோற்ற
நில்லாது  திரிபின் பிறிதோர்  பெயர்  நிலைபட  நிற்றலின் வேறோர்
பெயர் என வேண்


வேற்றுமையியல், 5 ஆம் நூற்பா.