சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

63

டியது போலும். இதனகத்து விகற்பமெல்லாம்  உரையிற்கொள்க.  இந்
நிகரன   ஓருருபும்   ஏலாதன.   அவ்வாய்க்  கொண்டான்  என்பது.
அவ்வாய்க்   கட் கொண்ட.......விழா  உருபேலாதது.  இந்நிகரன  பிற
உருபேற்கு மேனும் அறிந்துகொள்க.                          (7)

உருபு பெயரது இறுதியில் வரும் எனல்
 

70.

கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறுபெயர்க் காகும் இயற்கைய என்ப.

 

என் - எனின்,    உருபேற்றலும்   பெயர்க்கிலக்கணம்   என்பது
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேல் கூறப்பட்ட  முறைமையினிடை  நின்றுவருகிற ஐ
முதலாகிய  உருபும்,  தத்தம்  வாய்பாட்டு  நிலைமையின் வேறா காது
பெயர்க்கீறாய் வரும் இயல்பினையுடைய என்று சொல்லுவர் ஆசிரியர்,
(எ - று.)

(எ - டு.) சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது,
சாத்தன்கண் எனவரும்.

1மேல்“கு ஐ ஆன் என வரூஉம் இறுதி” என்று செய்யுட்கண் உரு
பீறுதிரிபு கூறுகின்றார் ஆதலின், அஃதொழிய வழக்கினுள் திரிபில்லை
என்றற்கு நிலைதிரியாது எனப்பட்டது என்க.                  (8)

பெயர்ச்சொற்கள் காலங்காட்டா வெனல்
 

71.

பெயர் நிலைக் கிளவி காலம் தோன்றா
தொழில் நிலை ஒட்டும் ஒன்றலங் கடையே.
 

என்- எனின்,  இதுவும்  பெயர்க்கு  ஓர் இலக்கணம் உணர்த்துதல்
நுதலிற்று.

(இ - ள்.) பெயராகிய நிலைமையுடைய  சொற்கள் காலந் தோன்றா;
யாண்டுமோ  எனின், அன்று. காலந் தோன்றுதற்குப் பொருந்தும் ஒரு
கூற்றுத் தொழிற் பெயரல்லாத விடத்து என்றவாறு.

என்றது  பெயர்தாம் பெயர்ப்பெயரும், தொழிற் பெயரும் என இரு
வகைப்படும்.  பெயர்ப்  பெயராவன  சாத்தன்,  கொற்றன்  என ஒரு
தொழிலாற் பெயரன்றி அவ்வப்பொருட்கு இடுகுறியாய் வருவன. இவை
காலம் தோன்றா.

தொழிற்பெயராயின் தோன்றும்.  தொழிற்பெயர்தாமும்  தொழிலின்
மேல் நின்ற தொழிற்பெயரும், பொருள்மேல் நின்ற தொழிற்பெயர்


வேற்றுமை மயங்கியல், 25 ஆம் நூற்பா.