பெறல் - ஊரைப் பெறும். இழவு - ஊரை இழக்கும். காதல் - மனைவியைக் காதலிக்கும்; வெகுளி - படையை வெகுளும். செறல் - செற்றாரைச் சேறும். உவத்தல் - தாயை யுவக்கும்; இவை வினைக்குறிப்பு. கற்பு - நூலைக் கற்கும். அறுத்தல் - ஞாணை அறுக்கும். குறைத்தல் - மரத்தைக் குறைக்கும். தொகுத்தல் - நெல்லைத் தொகுக்கும். பிரித்தல் - வேலியைப் பிரிக்கும். நிறுத்தல் - பொன்னை நிறுக்கும். அளவு - அரியை அளக்கும். எண் - அடைக்காயை எண்ணும். ஆக்கல் - அறத்தை யாக்கும். சார்தல் - வாய்க்காலைச் சாரும். செலவு - நெறியைச் செல்லும். கன்றல் - சூதினைக் கன்றும். நோக்கல் - சேயை நோக்கும். அஞ்சல் - கள்ளரை அஞ்சும். சிதைப்பு - நாட்டைச் சிதைக்கும் எனவும் வரும். அன்ன பிறவும் என்றதனால் விரலை முடக்கும், நாவினை வணக்கும் என்றற்றொடக்கத்து வினையும், அறவினையுடையன், ஊரை இன்புறும் என்றற்றொடக்கத்து வினைக்குறிப்பும் கொள்க. பிறவும் அன்ன. காப்பின் என்பது முதலான இன்னெல்லாம் உருபும் அன்று, சாரியையும் அன்று, அசைநிலை எனக் கொள்க. இடைநின்ற என்றா என்பன எண்ணிடைச் சொற்களாம். மற்றைய வேற்றுமைபோல் இது படும் பொருண்மை உணர்த்தாது முடிபு உணர்த்தியது என்னை ; இம்முடிபு ஏனை வேற்றுமைக்கும் உளவாலெனின், ஈண்டு முடிபு அன்று உணர்த்தியது; வினை வினைக்குறிப்பின் மேலிட்டு அது படுஞ் செயப்படுபொருளினை உணர்த்திற்றாக உரைக்கப்படும். செயப்படுபொருண்மையாவது என்னையாவெனின் ஒருவன் செய்யும் தொழிலினைத் தானுறுதல் எனக் கொள்க. அத்தொழிலினை உறுவதிதுவேயோ அத்தொழில் செய்வானுங் கருவியுஞ் செய்கின்ற காலமும் |