இனிச் செய்வானும் செயப்படு பொருளும் என்னும் இரண்டும் ஒன்றேயாயும் வரும். (எ - டு.)சாத்தன் தன்னைக் குத்தினான் எனவரும். இனிச் செயப்படுபொருட்கேதுவாயதூஉம் செயப்படுபொருளாய் வரும். அவை கற்கப்படும் ஆசிரியர், கற்கப்படா ஆசிரியர் எனவரும். மற்றும்இதன் கருத்து விகற்பம் உரையிற்கொள்க. (10.11) மூன்றாம் வேற்றுமை |
என் - எனின், மேல் நிறுத்த முறையானே மூன்றாம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மூன்றாமெண்ணுமுறைக் கண்ணதாகிய ஒடு என்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல் வினைமுதல் கருவியாகிய காரணங்களை உடைத்து. அஃது வருமாற்றைச் சொல்லின் ஒன்றனாலொன்று பண்ணப்படும் பொருண்மை, ஒன்றனாலொன்று நகுதல் என்னும் பொருண்மை, ஒன்றனாலொன்று தொழிலுறுதல் என்னும் பொருண்மை, ஒன்றனாலொன்று ஆதல் என்னும் பொருண்மை, ஒன்றனாலொன்றைக் கோடல் என்னும் பொருண்மை, ஒன்றனோடொன்று மயங்கல் என்னும் பொருண்மை,
1 இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம் பூரணர். |