காதல் - நட்டார்க்குக் காதலன், தாய்க்குக் காதலன் என்பன. சிறப்பு - வடுகரரசர்க்குச் சிறந்தோர் சோழிய அரசர், கற்பார்க்குச் சிறந்தது செவி என்பது. அதற்கு வினையுடைமை முதலாகக் கூறப்பட்டன எல்லாம் முன் கூறிய கொடைப் பொருளின் பாகுபாடு அல்ல. பிறபொருளென அறிக. அவற்றுள், அதற்குடம்படுதல், அதற்கு படுபொருள் என்னும் இரண்டும் கொடைநீர்மையும் சிறிதுடைய. உம்மையால் பிறவும் அதன்பாலுள. பண்ணிற்குத் தக்கது பாட்டு, பூவிற்குத் தக்கது வண்டு என்பனபோல வரும்; பிறவும் அன்ன. உம்மை இறந்ததுதழீஇய எச்சவும்மை யாகலான் இந்நிகரன கோடற்கு உடம்படாதா லெனின், இறந்தது தழீஇய அதனையே இரட்டுறமொழிதல் என்னும் ஞாபகத்தினான் எதிரது தழீஇயதூஉமாக்கிக் கூறப்பட்டது எனக் கொள்க. (14,15) ஐந்தாம் வேற்றுமை |