என் - எனின், நிறுத்த முறையானே, ஆறாம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஆறாம் எண்ணுமுறைக்கண்ணதாகிய அது என்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல், தன்னோடு தொடர்ந்ததோர் பொருளையும் தன்னின் வேறாகியதோர் பொருளையும், இதனது இது என்னும் கிழமை செப்பிநிற்றலை இலக்கணமாக உடைத்து; வருமாற்றைச் சொல்லின், இயற்கை என்பது முதலாகத் திரிந்து வேறுபடுதல் ஈறாக ஓதப்பட்ட பொருட் பாகுபாடுகளும், பிறவும் ‘அத்தன்மை தன்னினும் பிறிதினும்’ என ஓதிய இருவகையிடத்து வரும் பாகுபாடுகளும் அவ் ஆறாம் வேற்றுமைக் கூற்றன என்று சொல்லுவர் புலவர், (எ - று.) ‘இதனதிது என்னுங் கிளவி’ என்னாது ‘அன்ன’ என்றதனான் அஃறிணை யொருமை தோன்றவரும் அது என்பதன் அஃறிணைப் பன்மை தோன்றவருவதோர் அகரஉருபும் உண்டென்று கொள்ளப்படும். அஃது.
1 இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம் பூரணர். |