காலம் - மாரிக்கண் வந்தான், மாரிக்கண் நாள் என வரும். கண் - ஊர்க்கண் இருந்தான். கால் - ஊர்க்கால் இருந்தான். அகம் - மாடத்தகத்து இருந்தான். உள் - ஊருள் இருந்தான். உழை - சான்றோருழைச் சென்றான். கீழ் - மாடத்துக் கீழ் இருந்தான். மேல் - மாடத்து மேல் இருந்தான். பின் - ஏர்ப்பின் சென்றான். சார் - காட்டுச்சார் ஓடுங் களிறு. அயல் - ஊரயல் இருந்தான். புடை - ஊர்ப்புடை இருந்தான். இவையெல்லாம் உருபு. தே, வகை என்பன திசைக்கூறு. இது பொருள். திசை என்பது ஆகாயம்போல் வரையறைப்படாது சொல்லுவான் குறிப்பினவாய் நிற்றலின் வேறு பொருளென்று, நிலமென்புழி அடக்காது, கொண்டுபோந்து கூறினார்போலும். வடக்கண் வேங்கடம், தென்கட்குமரி எனவரும். முன் - தேர் முன் சென்றான். இடை - சான்றோரிடை இருந்தான். கடை - கோயிற்கடைச் சென்றான். தலை - தந்தைதலைச் சென்றான். வலம் - கைவலத் துள்ளது கொடுக்கும். இடம் - கையிடத்துப்பொருள் என வரும். பிறவும் என்றதனால், கிழவோள்தே எத்து, கிழவி மாட்டு என்றாற் போல்வன கொள்க. ஏனை வேற்றுமைபோலப் பொருட்பாகுபாடு அன்றி உருபின் பாகுபாடு உண்மையின் அதனை விரித்தோதினார் எனக் கொள்க. ஓதின உருபுகளெல்லாவற்றினும் கண் எனும் உருபு சிறந்தமையின் முன்வைத்தது என்பது. மற்றும் புறம், அகம் என்பனபோல்வன எல்லாம் பெயராய், ஆறாவ தன் பொருண்மையாய் வருகின்றமையின் ஏழனுருபு ஆமாறு என்னை |