என் - எனின், ஐ முதலிய ஆறுருபிற்கும் பொதுவாய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வேற்றுமைச் சொல்லினது பொருளை விரித்துணர்த்துங்காலத்து, அவ்வேற்றுமைப் பொருள்கள் பெயரது ஈற்றின் கண்ணே நின்று நடக்கும், தொக்க விடத்து நின்று, (எ - று.) (எ - டு.) மரம் குறைத்தான் என்பது மரத்தைக் குறைத்தான் என இறுதிக்கண் விரிந்து நின்றது. தாய் மூவர் என்பது தாயோடு மூவர் என விரிந்தது. பிறவும் அன்ன. இது “கூறிய முறையின்” 2 என்றதனால் அடங்காதோ எனின் அஃது உருபுநிற்கும் இடம் கூறியது; அங்ஙனம் நின்ற உருபு விகாரப்பட்டு, தொக்குநின்று பின் விரியும் வழியும் பிறாண்டு விரியாது முன் கூறிய அதனையே திரிபுபடுவழிக் கூறியது எனக்கொள்க. (22) உருபு நோக்கிவரும் சொற்களின் இலக்கணம் |