சொல்லதிகாரம் - இடையியல்90

எ-டு : எற்றென்   உடம்பின்   எழில்நலம்   என்ற  வழி முன்னர்
எழிலுடையதாக  இருந்த உடம்பு இப்பொழுது எழில்  குன்றியமையைப்
புலப்படுத்தலின் காலக் கடப்பினை உணர்த்தி நிற்றல் காண்க.

என் நலம் இறந்தது எனின் அது கழிவுப் பொருட்டாம் என்க.

மற்றையது
  

259. 

மற்றை தென்னுங் கிளவி தானே
சுட்டுநிலை யொழிய வினங் குறித்தன்றே.         (16)

(மற்றையது என்னும் கிளவி தானே
சுட்டு நிலை ஒழிய இனம் குறித்தன்று ஏ).
  

ஆ.மொ.

ஆல்.

The morpheme /maŗŗaiyathu/ points out to the one that is
related to and not what is mentioned.

பி.இ.நூ.

The morpheme / maŗŗaiyathu/ points out to the one that is
related to and not what is mentioned

நன். 434

மற்றைய தென்பது சுட்டியதற் கினம்.

இல.வி.268

மற்றைய தென்பது சுட்டியதற் கினம்.

முத்து ஒ. 9

மற்றைய தென்பது சுட்டியதற் கினம்.

இளம்.

பல     பொத்தகம்  கிடந்தவழி, ஒருவன் ஏவலாளனைப் பார்த்துப்
‘பொத்தகங்  கொண்டுவா’  என்றால், அவன் ஒரு பொத்தகங் கொண்டு
வந்த  விடத்துத்தான்    கருதிய  பொத்தகம்  அன்றெனில் ‘மற்றையது
கொணா’    என்னும் :   என்றக்கால்,    இக்   கொணர்ந்த   தனை
ஒழிக்குஞ்சொல்    இக்    கொணர்ந்தபொத்தகம்    சுட்டிற்றாகலான்,
கொணர்ந்ததனை   ஒழிக்குஞ்   சுட்டு    நிலை  அதனை  யொழித்து
ஒழிந்ததென்று  அவ்வினத்தல்லது   பிறிதொன்று  குறித்தது கொல்லோ
எனிற்குறியா :  மற்று  அப்பொத்தகத்துள்   ஒன்றே பின்னுங் குறித்தது
எனப்படும்.

சேனா.

இ-ள் ; மற்றையதெனப்   பெயர்க்கு  முதனிலையாய் வரும் மற்றை
என்னும்   ஐகார    வீற்றிடைச்   சொல்சுட்டப்பட்டதனை  யொழித்து
அதனினங் குறித்து நிற்கும், எ-று.