ஆ. மொ. இல. The scholars say that the morpheme ‘anthil’ denotes the place and stands as syllable. ஆல். /antil/ stands for place and as a euphonic empty morph. பி.இ.நூ. நன். 437 அந்தில் ஆங்கு அசைநிலை இடப்பொருளவே. இல. வி. 273 அந்தில் ஆங்கு அசைநிலை அவற்றுள் அந்தில் இடப்பொருட் டாகலும் உரித்தே. முத்து. ஒ. 14 அந்தில் ஆங்கு அசைநிலை இடப்பொருளவ்வே. இளம். இதுவும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்குவனவற்றையும் அசை நிலையையும் உணர்த்துதல் நுதலிற்று. வ-று : இடஞ்சுட்டி வந்தது, 1 ‘வருமே சேயிழை யந்திற், கொழுநற்காணிய’ (குறுந். 293) எனவரும். அசைநிலை, ‘அந்தில் கச்சினன் கழலினன்’ (அகம். 76) எனவரும்.
1. பொருள் : செம்மையான இழையணிந்த பரத்தை அவ்விடத்துக் கொழுநனைக் காண வருவாள். |