சேனா. இ-ள் : அந்தில் என்னுஞ் சொல், அங்கென்னும் இடப் பொருள் உணர்த்துவதும் அசைநிலையும் என இரண்டாம், எ-று. உ-ம் : ‘வருமே சேயிழை யந்திற் கொழுநற் காணிய’ (குறுந். 293) என்புழி ‘ஆங்கு வரும்’ என்றவாறாம். ‘அந்திற் கச்சினன் கழலினன்’ (அகம். 76) என வாளாதே அசைத்து நின்றது. தெய். இதுவுமது. இ-ள் : அந்தில் என்பது ஆங்கு என்னும் பொருண்மை பெற்றும் அசைநிலையாகியும் வரும், எ-று. உ-ம் : ‘வருமே சேயிழை யந்திற் கொழுநற் காணிய’ (குறுந். 293) என்பது ஆங்கு என்னும் பொருளுணர்த்திற்று. ‘அந்திற் கச்சினன் கழலினன்’ (அகம். 76) என்புழி அசை நிலை யாயிற்று. நச். இது, பொருள்படுமாறும் அசைநிலையும் கூறுகின்றது. இ-ள் : அந்தில் ஆங்கு அசைநிலைக் கிளவி என்று ஆ இரண்டு ஆகும் இயற்கைத்து என்ப - அந்தில் என்னுஞ் சொல் ஆங்க என்னும் இடப்பொருள் உணர்த்துதலும் அசைநிலைச் சொல்லாதலும் என்னும் அவ்விரண்டு கூறாம் இயற்கையை யுடைத்து என்று கூறுவார் புலவர். எ-று. உ-ம் : ‘வருமே சேயிழை யந்தில்,’ ‘அந்தில் கச்சினன் கழலினன்’ என இடமும் அசைநிலையுமாய் நின்றது. ஆதி. 1உ-ம் : இடருற வருவன் இறைவன் அந்தில் - அந்நேரத்தில் ஆங்கு அரம்பை யந்தில் அழகுடையாள் - அசை
1. இது வலிந்து தந்த உதாரணம். செய்யுளிற் காட்டலே நன்று. வழக்கில் அந்தில் ஆட்சியில்லை. |