ஆ. மொ : இல. ‘Kol’ denotes doubt. ஆல். /Kol/ expresses doubt. பி.இ.நூ : நன். 435 கொல்லே ஐயம் அசைநிலை கூற்றே. இல.வி. 269 கொல்லே ஐயம் அசைநிலை கூற்றே. முத்து. ஒ. 15 கொல்லே ஐயம். இளம். வ-று : இது, குற்றி கொல்லோ, கன் கொல்லோ, நாய் கொல்லோ, நரி கொல்லோ என வரும். சேனா. உ-ம் : 1 குற்றி கொல்லோ மகன் கொல்லோ எனக் கொல் ஐயத்துக்கண் வந்தவாறு. தெய். இதுவுமது. இ-ள் : கொல் என்பது ஐயம் குறித்து வரும், எ-று. உ-ம் :‘அதுகொல் தோழி காம நோயே’ என்றவழி, ஐயம் காட்டிற்று. நச். இது பொருள்படுமாறு கூறுகின்றது.
1. குற்றி கொல்லோ - குற்றியோ. |