சொல்லதிகாரம் - இடையியல்100

இ-ள் : கால்லே   ஐயம்   -   கொல்   என்னும்   சொல்  ஐயப்
பொருண்மையை உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘யாது கொல் மற்றவர் நிலையே’ (அகம். 136),‘இதனளவுண்டு
கொல்  மதிவல்  லோர்க்கே’  (அகம். 48) எனத் துணிவின் கண் ஐயம்
சிறிது நினைத்தலும் ஒன்றென முடித்தலாற் கொள்க.

வெள்.

உ-ம் : ‘இன்றும்    வருங்கொல்’   (புறம். 264) என வரும், குற்றி
கொல்லோ    மகன்   கொல்லோ   என   உரையாசிரியர்   காட்டிய
எடுத்துக்காட்டுள்   ஓகாரம்  வினாப்   பொருள்  உணர்த்தக்  ‘கொல்’
என்பது  அசைநிலையாய்  அமைதலைக்  கண்ட பவணந்தியார், கொல்
என்பது  ஐயப்  பொருளில்  வருதலேயன்றி  அசைநிலையாயும் வரும்
என்பதனை,  “கொல்லே  ஐயம்  அசைநிலைக்   கூற்றே”  (நன். 434)
என்னுஞ் சூத்திரத்தால் உணர்த்தினார்.

எல்
 

264.

1 எல்லே இலக்கம்.                           (21)
 

ஆ.மொ :

இல.

‘El’ denotes brightness.

ஆல்.

/el/ expresses luminosity.

பி.இ.நூ.

முத்து. ஒ. 15

எல்லே விளக்கம்

இளம்.

வ-று :  இது, ‘எல்வளை’ (புறம்.24) எனவரும்.


1. எல்லே இரக்கம் எல்லே  விளக்கம் = பாடம்