சேனா. எல் என்பது உரிச்சொல் நீர்மைத் தாயினும், ஆசிரியர் இடைச்சொல்லாக ஓதினமையால் இடைச்சொல் என்று கோடும். உ-ம் : ‘எல்வளை’ (புறம். 24) என எல் என்பது இலங்குதற் கண் வந்தவாறு. தெய். இதுவுமது. இ-ள் : எல் என்பது இலங்குதல் குறித்துவரும், எ-று. உ-ம் : ‘எல்வளை’ (புறம்.24) இலங்குவளை. இது உரிச்சொல் அன்றோ எனின், அது குறைச்சொல்லாகி நிற்கும். இது குறைவின்றி நிற்றலின் இடைச்சொல்லாயிற்று. நச். இ-ள் : எல்லே இலக்கம் - எல்என்னும் சொல் விளங்குதற் பொருண்மை யுணர்த்தும், எ-று. உ-ம் : ‘எல்வளை எம்மொடு நீவரின்’ (கலி.13) எனவரும். வெள். இ-ள் : எல் என்னும் சொல் இலக்கம் (விளக்கம்) என்னும் பொருள்பட வரும், எ-று. உ-ம் : எல்வளை; இலங்கும் வளை என்பது இதன் பொருள். இலக்கம்- விளக்கம். ஒளியாகிய பண்பினைத் தத்தங் குறிப்பானன்றி வெளிப்படையாக வுணர்த்தும் இச்சொல்லை உரிச் சொல் எனக் கொள்ளுதலே பொருத்தம் உடையதாகும் என்பது “எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும், ஆசிரியர் இடைச்சொல்லாக ஓதினமையான் இடைச்சொல் என்று கோடும்” எனவரும் சேனாவரையர் உரையால் இனிது விளங்கும். இடைச்சொல் உரிச்சொல் என்னும் பகுப்பினை நுனித் துணர்ந்து இலக்கண நூல் செய்த தொல்காப்பியர், இலக்கம் எனப் பொருள்படும். ‘எல்’ என்னும் லகரவீற்று உரிச்சொல்லை இடையியலிற் கூறியிருத்தல் இயலாது என்பதும், இரங்குதற் பொருட்டாகிய எல்லே என்னும் ஏகாரவீற்று இடைச் சொல்லையே ஆசிரியர் இவ்வியலிற் கூறியிருத்தல் வேண்டும் என்பதும், ‘எல்லே யிரக்கம் எனத் தொல்காப்பியர் கூறிய |