சொல்லதிகாரம் - இடையியல்104

சேனாவரையர்  இலக்கம் என்பதற்கு விளங்கித்தோன்றுதல் என்னும்
பண்புப்   பொருள்   கொண்டு  உரிச்சொல்  நீர்  மைத்து   என்றார்.
வளைகள்  அசைந்து  ஒலிக்கும்  நிலைமையைச் சுட்டுதற்கண்   அஃது
இடைச்சொற்    குறிப்பாதல்    நோக்கி   ஆசிரியர்    இடையியலுள்
வைத்தாரென அறிக.

இவ்விடைச்     சொல்லின் பொருண்மை ஓராமல் எல்லே இயக்கம்
எனவும்  எல்லே விளக்கம் எனவும் பாடங்கொண்டு உரை   கூறுவாறும்
உளர். இவை பாடமாயின் அஃது உரிச் சொல்லேயாமென்க.

ஆர்
  

265. 

1இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி
பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே.      (22)

(இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்குஉரி எழுத்தின் வினையொடு முடிமே)
  

ஆ.மொ.

The morpheme ‘ār’ when succeeding a proper name ends in
a verbs which belongs to epicene plural.

ஆல்.

The morpheme /ār/ following  a  generic name requires   a
personal class plural ending in the predicate.

பி.இ.நூ.

முத்து. ஒ. 17

இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடியும்.

இளம்.

உரை : இது ஆர் என்னும்  இடைச்சொல் 2பெயர் முன்  அல்லது
வாரா என்பது.


1. இச்சூத்திரத்துடன் அடுத்துவரும் சூத்திரத்தை  யிணைத்து  ஒரே
சூத்திரமாகக் கொள்வர் தெய்வச்சிலையார்.

2. பெயர் என்றது இயற்பெயரை :