சொல்லதிகாரம் - இடையியல்106

‘பலர்க்குரி     யெழுத்தின் வினையொடு  முடிமே’   என ஆரைக்
கிளவிய  தியல்பு  உணர்த்தவே அஃது 1 உயர்த்தற்   பொருட்டாதலும்,
திணை வழுவும் பால்வழுவும் அமைத்தலும் பெற்றாம்.

2ஒருமைப்   பெயர் முன்னர் ஒருமை சிதையாமல் ஆரைக் கிளவி
வந்து  பலரறி  சொல்லான்  முடிதலின்,  ‘ஒருவரைக்  கூறும் பன்மைக்
கிளவியின்’ (கிளவி. 27) வேறாதலறிக.

தெய்.

(அடுத்த சூத்திரத்தில் இதை இணைத்து உரை காண்க.)

நச்.

இஃது ஆர் என்னும் இடைச்சொல் முடிபு கூறுகின்றது.

இ-ள் : இயற்பெயர்  முன்னர்    ஆரைக்கிளவி - இருதிணைக்கும்
இயலும்பெயர்க்கும்   அஃறிணை  யிருபாற்கும்    முன்னர்வரும்  ஆர்
என்னும்  இடைச்  சொல்,  பலர்க்கு  உரி  எழுத்தின்    வினையொடு
முடிமே-ரஃகான்   ஒற்றினை   யீறாகவுடைய   வினைச்    சொல்லான்
முடியும். எ-று.

உ-ம் : பெருஞ்சேந்தனார்    வந்தார்,       முடவனார்  வந்தார்,
முடத்தாமக்  கண்ணியார்  வந்தார்,  தந்தையார்   வந்தார்   எனவும் :
கிளியார் வந்தார் எனவும் வரும்.

பெரும்பான்மை இயற்பெயர்  கூறவே, நம்பியார் வந்தார் நங்கையார்
வந்தார் எனச் சிறுபான்மை உயர்திணைப் பெயர்


1. சேந்தனார் ஆர் ஈறாயினும்  ஒருமை :  அது  வந்தார்   எனப்
பன்மை வினை   கொண்டது.    அதனால்  ஒருமை  பன்மைப்
பால்வழு. அது அமைக்கப்பட்டது. நரியார்   வந்தார்  என்பதில்
நரியார் அஃறிணை   ஒன்றன்பால் :  அது    வந்தார் என்னும்
உயர்திணைப் பன்மை  வினை  கொண்டது.   அதனால்   இது
திணைவழு.  இது  அமைக்கப்பட்டது. இப்படியே பிறவும்.

2. சாத்தன்  ஒருமை. இன் னகர வீறு திரிந்து சாத்தர் என வருவது
பன்மை: அதனால் இப்பன்மை ஒருமை சிதைந்த பன்மை.சாத்தன்
என்பது ஒருமை : இச்சொல் இறுதி எழுத்துச் சிதையாமல்  நிற்க
ஆர்வந்து சாத்தனார் என நிற்கிறது.  அதனால்  இது   ஒருமை
சிதையாமல் பன்மையாயிற்று. அதனால் சாத்தர்  என்பது  வேறு
சாத்தனார்   என்பது   வேறு,  சாத்தர் என்பது அவர் என்பது
போன்றது.