சொல்லதிகாரம் - இடையியல்108

இச்சூத்திரத்திற்கு    உரையாசிரியர் கொள்ளும் பொருள்   வேறு :
சேனாவரையர்,  நச்சினார்க்கினியர்,  தெய்வச்சிலையார்    இம்மூவரும்
கொள்ளும்    பொருள்    வேறு.    உரையாசிரியர்     மதப்   படி
இச்சூத்திரத்திற்கு  அந்நுவயம் :  ‘வினையொடு  முடியும்    பலர்க்குரி
யெழுஉத்தின்  ஆரைக்கிளவி  இயற்பெயர்  முன்னரே ஆம்’  என்பது.
இதன் பொருள் :

“வினையொடு முடியும் அர் ஆர் ப என்ற பலர்க்குரி
யெழுத்துகளுள் ஆர் என்னும் கிளவி இயற்பெயர் முன்
னர் வருமேயன்றிப் பெயரின் முதனிலை முன்னர் வாரா”

என்பது.     அவர்,  அரசர்  என்னுமிடத்து,  அ, அரசு  என்ற முதல்
நிலை  முன்னர் ‘அர்’ என்னும் கிளவி வருவது போல ஆர்   என்னும்
கிளவி  வாராது. அரசன் அரசி என்றாற் போன்ற பெயரின்   முன்னரே
வரும்.   ஆதலின்    ‘வினையொடு  முடியும்  பலர்க்குரி  யெழுத்தின்
ஆரைக்  கிளவி   என்பது  1 உத்தேசியம். இயற்பெயர் முன்னர் ஆம்
என்பது 2 விதேயம்.    இவ்வாறாயின்   ஆரைக்  கிளவி    கொண்ட
பெயரின் முன்னர்ப் பன்மை விகுதி கொண்ட   வினை வருவது எற்றாற்
பெற்றாம்  எனின், ‘வினையிற் றோன்றும் பாலறி  கிளவியும் - பெயரிற்
றோன்றும்  பாலறி  கிளவியும்  -  மயங்கல்  கூடா    தம்மர பினவே’
(கிளவி-11) என்னுஞ் சூத்திரத்தால் என்க.

சேனாவரையர்   நச்சினார்க்கினியர் தெய்வச்சிலையார் இம் மூவரும்
கூறும்  உரையின்படி,  ‘இயற்பெயர்  முன்னர்  வரும்   ஆர் என்னும்
இடைச்சொல்’  உத்தேசியமாகும் :   ‘பலரறி   சொல்லால்    முடிதல்’
விதேயமாகும்.  இயற்பெயர்  முன்னர்  ஆர்  என்னும்   இடைச்சொல்
வரும்  என்று  முன்னரே ஆசிரியர் விதித்திருப்பின்   இங்கு அதனை
உத்தேசியமாகக்   கொள்ளலாம்.   அவ்வாறு    சூத்திரத்தில்  எங்கும்
விதிக்கப்பட்டதாகத்    தெரியவில்லை.    மேலும்,     ஆரைக்கிளவி
பன்மையைக்  குறிக்கும்  இடைச்சொல்  லாதலின்    அதன் முன்னர்ப்
பன்மை  வினையே  வரும்  என்பது  ‘வினையிற்   றோன்றும் பாலறி
கிளவியும்’    (கிளவி.11)    என்னஞ்   சூத்திரத்தாற்   பெறப்பட்டது :
இச்சூத்திரம்   வேண்டா,   “ஒருமைப்   பெயர்    முன்னர்  ஒருமை
சிதையாமல்  ஆரைக்  கிளவி  வந்து  பலரறி   சொல்லான் முடிதலின்
ஒருவரைக்   கூறும்   பன்மைக்   கிளவியின்   வேறாதலறிக”  என்று
சேனாவரையரும்  நச்சினார்க்கினியரும் கூறுகின்றனர்.   அவ்வாறாயின்,
ஆரைக் கிளவி எதனைக் காட்டுகின்றது? ‘ஒருவரைக் கூறும் பன்மைக்


1. உத்தேசியம் - எழுவாய்

2. விதேயம் - பயனிலை