சொல்லதிகாரம் - இடையியல்109

கிளவி,  யாம்,  நீயிர்,  இவர், இவையே : அரசனார் முதலியவை யல்ல’
என்று  கொள்வதற்கு  யாது பிரமாணம்?  ‘ஒருவரைக் கூறும் பன்மைக்
கிளவியும்’  (கிளவி.27)  என்னுஞ்    சூத்திரவுரை  யில்  ‘தாம் வந்தார்
தொண்டனார்’  எனப் பன்மைக்   கிளவி இழித்தற் கண்ணும் வந்ததால்
எனின்’ என்று சேனாவரையர்   கூறுகின்றார். ஆங்குத் 1 தொண்டனார்
என்பது  பன்மைக்  கிளவியா    ஒருமைக்  கிளவியா?  உரையாசிரியர்
கூறிய  பொருள்  பொருத்தமாய்  இருப்பினும்    சூத்திரத்தில் முற்றுப்
போல்  தோன்றும்  ‘முடிமே’  என்ற  சொல்லைப்   பெயரெச்சமாகவும்
இயற்பெயர்  என்பதற்குப்  ‘பொருளுக்கு  இயையும்    பெயர்’ என்பது
பொருளாகவும் கொள்ள வேண்டியுள்ளன.

மேலும்,     ‘நம்பியார்  வந்தார்,  நங்கையார்     வந்தார்  எனச்
சிறுபான்மை   உயர்திணைப்   பெயர்  முன்னர்   வருதல்  ஒன்றென
முடித்தல்  என்பதனாற் கொள்க’ என்று கூறுகின்றனர்   சேனாவரையர்.
உரையாசிரியர்     கொள்கைப்படி    சூத்திரத்     தானே    அவை
பெறப்படுதலின்    அவற்றை    ஒன்றென    முடித்தலாற்   கொள்ள
வேண்டுவதின்று.

‘அசை  நிலைக்   கிளவி’ (பெய. 22) என்ற மேற்  சூத்திரத்தையும்
இதனுடன் சேர்த்து    ஒரு     சூத்திரமாக்கினார்   தெய்வச்சிலையார்.
அவ்வாறு கூறின் வாக்கிய பேதம் வருமாதலின் அது பொருந்தாது.

சிவ.

ஆசிரியர்     இருதிணைப் பெயர்கள் பற்றிக் கூறும் போது அவை
னஃகான்   ஒற்று  (கிளவி.5) ளஃகான் ஒற்று (கிளவி. 6) ரஃகான் ஒற்று
(கிளவி.7)    கடதறவூர்ந்த  குன்றியலுகரத்திறுதி (கிளவி.8) அஆவ என
வரூஉம்  இறுதி (கிளவி.9) இறுதி எழுத்துகளை விதந்து கூறியிருத்தலின்
ஈண்டு    இயற்பெயர்  முன்னர்  ஆரைக்  கிளவி என்றது இயற்பெயர்
யாதோர்  திரிபும்   இன்றி நிற்க அதைச் சார்ந்து வரும் ஆர் என்னும்
இடைச் சொல்  பற்றியேயாம் என்க. ரஃகான் ஒற்று ... பலர்பால்  சொல்
என்றது  அவர்   இவர்  போல்வனவற்றை. இயற்பெயர் முன்னர்  ஆர்
என்றது  சாத்தனார்   நரியார்  போல்வனவற்றை.  ஒருவரைக்   கூறும்
பன்மைக்    கிளவி      என்பது    பன்மைச்   சொல்   ஒருமைக்கு
வழங்கப்படுவது. அவர் என்னும் பன்மைச் சொல்


1. சேனாவரையர் அங்குப்  பன்மைக்  கிளவி என்று குறிப்பிட்டது
‘தாம்’ என்பதையே;   தொண்டனார்    என்பதைப்     பற்றிக்
குறிப்பிடவில்லை.