ஆ. மொ. இல. ‘E’ and “Kurai” stand as lengthened morphemes to give sweetness and to serve as syllables. ஆல். /ē/ and /Kurai/ satisfy the two needs of extra phonemes and extra syllables. பி.இ.நூ. முத்து. ஒ. 18 ஏவும் குரையும் இசைநிறை அசைநிலை. இளம். உரை : ஏ - இசைநிறை; குரை - அசைநிலை என நிரல் நிறையாகக் கொள்க, எ-று. வ-று : ‘ஏஎ வம்பல் மொழிந்தனம் யாமே’ - ஏ இசை நிறையாயினவாறு. 2 ‘பல்குரைத் துன்பங்கள் சென்று படும்’ (குறள். 1045) எனக் குரை அசை நிலை. சேனா. இ-ள் : ஏ யென்னுமிடைச் சொல்லும் குரை யென்னுமிடைச் சொல்லும் இசை நிறையும் அசை நிலையும் என ஓரொன்றிரண்டாம், எ-று. உ-ம் : “ஏஎ யிஃதொத்தன் நாணிலன் தன்னொடு” (கலி.62) என்பது இசை நிறை. ‘ஏஎ யென் சொல்லுக’ என்பது அசை
1. ஏயுங் குரையும் - சேனா. நச். பாடம்; 2. பல் குரைத்துன்பங்கள் - பல துன்பங்கள். |