சொல்லதிகாரம் - இடையியல்114

நிலை. ‘அளிதோ  தானே  1 பெறலருங் குரைத்தே’ (புறம். 5) என்பது
இசைநிறை,  ‘பல்குரைத்  துன்பங்கள்   சென்று  படும்’  (குறள். 1045)
என்பது அசை நிலை.

தொடர்  மொழி முதற்கட் பிரிந்து  நின்றல்லது பெரும் பான்மையும்
ஏகாரம்   இசைநிறையும்   அசைநிலையும்    ஆகாமையின்.   சார்ந்த
மொழியோடு   ஒன்றுபட்டிசைத்து   இடையும்     இறுதியும்   நிற்குந்
தேற்றேகார முதலாயின வற்றோடு ஒருங்கு கூறாது வேறுகூறினார்.

2 அஃதேல்     இதனை  நிரல்நிறைப்   பொருட்டாகக்  கொண்டு
ஏ-இசைநிறை,  குரை-அசைநிலை  என்றாரால்    உரையாசிரியரெனின்,
அற்றன்று;  மற்று  அந்தில்  என்பன  போலப்    பொருள் வகையான்
வேறுபடுவனவற்றை   இரண்டாம்    என்பதல்லது,    சொல்வகையான்
இரண்டாகிய சொல்லை இரண்டாம்   என்றதனான் ஒருபயனின்மையின்,
அவர்க்கது   கருத்தன்றென்க.   அல்லதூஉம்,  ஒவ்வொரு   சொல்லும்
இசைநிறையும்  அசையிலையு   மாக  லுடைமையான் அவற்றை  யுடன்
கூறினார்.   என்னாக்கால்    இசைநிறையும்  அசைநிலையும்   ஒருங்கு
மயங்கக் கூறலாம் ஆகலானும் அவர்க்கது கருத்தன்மை யுணர்க.

தெய்.

அசைநிலையும் இசைநிறையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : ஏ  என்னும்    சொல்லும்,   குரை   என்னும்  சொல்லும்
இசைநிறைத்தலாகியும்     அசைநிலையாகியும்   வரும்   அவ்விரண்டு
நிலைமையும் உடைய, எ-று.

ஈண்டு     ஏ       என்றமையான்  ஓரெழுத்  தொருமொழியாகிய
உயிரெழுந்தே   கொள்ளப்படும்.  முன்கூறப்பட்ட  ஏகாரம்  மொழிக்கு
ஈறாகி வருதலின் உயிர்மெய் யென்று கொள்ளப்படும்.

இசைநிறையாவது  இசை நிறைத்தற்  பொருட்டு  ஒரு  சொல்லோடு
ஒட்டிவரும்; அசைநிலையாவது தனிவரும்.


1. பெறலருங்குரைத்து - பெறலரிது. 

2. இப்பகுதிக்கு உரையிறுதியில் சுந்தர மூர்த்தி விளக்கம் காண்க.