‘ஏஎ யிவளொருத்தி பேடியோ என்றார்’ என்றவழி, ஏ என்பது இசைநிறையாயிற்று. ‘ஏ தெளிந்தேம் யாம்’ என்பது அசைநிலையாயிற்று. ‘அளிதோ தானே அதுபெறலருங் குரைத்தே’ (புறம்.5) 1 ‘சேர்ந்த சினையிளங் குரைய வாயினும்’ என்பன இசை நிறை. “நல்குர வென்னும் இடும்பையுட் பல்குரைத், துன்பங்கள் சென்று படும்” (குறள். 1045) - இது அசைநிலை. நச். இஃது இசைநிறையும் அசைநிலையும் கூறுகின்றது. இ-ள் : ஏயுங் குரையும் இசைநிறை அசைநிலை ஆ இரண்டாகும் இயற்கைத்து என்ப -ஏ என்னும் இடைச் சொல்லும் குரை என்னும் இடைச் சொல்லும் இசைநிறையும் அசை நிலையும் என ஒரோவொன்று அவ்விரண்டு இயல்பினை யுடைத்து என்று கூறுவர் ஆசிரியர், எ-று. உ-ம் : ‘ஏஎ இஃதொத்தன் நாணிலன் தன்னோடு’ (கலி. 62) இஃது இசைநிறை. ஏஎ எனச் சொல்லியது - இஃது அசைநிலை. ‘அளிதோ தானே யது பெறலருங் குரைத்தே’ (புறம்.5) இஃது இசைநிறை. ‘பல்குரைத் துன்பங்கள் சென்றுபடும்’ (குறள் 1045) இஃது அசைநிலை. தேற்றேகாரம் முதலியன போலச் சார்ந்த மொழியோடு ஒன்றுபட்டு இசையாது தொடர்மொழி முதற் கண் பிரிந்திசைத்தலின் வேறு கூறினார். கு. சுந்தரமூர்த்தி. ஏ, குரை ஆகிய இரு சொற்களும் ஒவ்வொன்றுமே இசை நிறையும் அசைநிலையுமாகும் என்பது சேனாவரையர் கருத்தாகும். ஆனால் இளம்பூரணர் இந்நூற்பாவை நிரல் நிறையாகக் கொண்டு ஏ இசைநிறைப் பொருளிலும், குரை அசைநிலைப் பொருளிலும் வரும் எனப் பொருள் கொண்டார். இதனைச் சேனாவரையர் இரு காரணங்களால் மறுக்கின்றார். ‘மற்றென்கிளவி’ என்னும் நூற்பாவிலும், ‘அந்தில்’ என்னும் நூற்பாவிலும் ‘அப்பாலிரண்டென்றும்’, ‘ஆயிரண்டாகும்’ என்றும் கூறிய தொகையெல்லாம் பொருளைக் குறித்தனவே யன்றிச் சொல்லைக்குறித்தனவல்ல. ஆதலின் ஈண்டும் ‘ஆயிரண்
1. ‘சேர்ந்த சினையிளையவாயினும்’ என்பது ‘சேர்ந்த சினையிளங் குரைய வாயினும்’ என அசைநிலை பெற்று வந்தது. |