டாகும்’ என்னும் தொகை ஏ, குரை இரண்டும் ஒவ்வொன்றுமே இசைநிறையும் அசை நிலையுமாக வரும் என்னும் பொருளைக் குறிக்குமேயன்றிச் சொல்லைக் குறிக்காது என்பதாம். இளம்பூரணர் கூறுவதுபோல ஏ இசைநிறையும் குரை அசைநிலையும் ஆக வரும் எனின், அவ்விரண்டையும் ஒரு நூற்பாவில் கூறுவது மயங்கக் கூறலாகும். பொருளால் ஒன்று படும் சொற்களை ஒருங்கு கூறுவது பொருத்தமும் தெளிவு மாகுமேயன்றி, வெவ்வேறு பொருளைக் குறிக்கும் இரு சொற்களை ஒருங்கு கூறுவது அத்துணைப் பொருத்தமும் தெளிவும் உடைத்தாகாது என்பதாம். பால. இயற்கையாவது பொருட்கூறுபாடு. பொருளால் ஒத்து வருதலின் ஏயும் குரையும் ஒருங்கு கூறினார். இவ்வேகாரம் தொடர்மொழியின் முதற்கண் தனித்து வருதலின் தோற்றம் வினாவே, என்றதனொடு கூறாராயினார் என்க. மா |