சொல்லதிகாரம் - இடையியல்117

இளம்.

வ-று : இது, ‘மாயக்கடவுட்  குயர்கமா வலனே’  - உயர்க என்னும்
வியங்கோட்கண் மா என்னுஞ் சொல் அசைநிலையாய் வந்தது.

சேனா.

இ-ள் : மாவென்னும்    இடைச்சொல்   வியங்கோளைச்   சார்ந்து
அசைநிலையாய் வரும், எ-று.

உ-ம் : ‘புற்கை யுண்கமா கொற்கையோனே’

தெய்.

அசை நிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : மா என்னுஞ் சொல்  வியங்கோட்கண்  அசை   நிலையாகி
வரும், எ-று.

உ-ம் : ‘உப்பின்று, புற்கை  யுண்கமா  கொற்கையோனே’,  ‘ஓர்கமா
தோழியவர் தேர்மணிக் குரலே’ என வரும்.

நச்.

இது அசை நிலை கூறுகின்றது.

இ-ள் : மாஎன் கிளவி வியங்கோள்  அசைச் சொல் - மா என்னும்
இடைச்   சொல்    பெரும்பான்மை  வியங்கோளைச்  சார்ந்து  அசை
நிலையாய் வரும். எ-று.

உ-ம் :‘புற்கை யுண்கமா கொற்கையோனே’ எனவரும்.

முன்னிலை அசைச் சொற்கள்
 

269.

1மியாயிக மோமதி யிகுஞ்சின் னென்னு
மாவயி னாறு முன்னிலை யசைச்சொல்            (26)

(மியா இக மோ மதி இகும் சின் என்னும
ஆவியின் ஆறும் முன்னிலை அசைச்சொல்)
 


1. மியா என்பதில்  ‘யா’   என்பதே  அசைச்சொல்  என்பது வே.
வேங்கடராசுலு ரெட்டியார் கருத்து என்பது மொழி  மரபு  முதற்
சூத்திரத்துக் குறிக்கப்பட்டுள்ளது. டாக்டர்  இசரயேல்  கருத்தும்
இதுவே. கேண்மியா என்பது கேள்+உம்+யா எனப்  பிரிக்கப்படும்
என்பர் அவர்.