ஆ.மொ. இல. ‘ miyā ’ ‘ika’ ‘mō ’ ‘mathi’ ‘ikum’ and ‘sin’ these sir serves as particles of verbs belonging to the second person. ஆல். With second person / miyā /, /ika/, /mō/, /mati/, /ikum/ and thin/are the six empty morphs. பி.இ.நூ. நன். 440 மியா இக மோமதி அத்தை இத்தை வாழிய மாள ஈ யாழ முன்னிலை யசை. இல. வி. 276 தொன். 137 இத்தை அத்தை யாழ இக மதி மான் ஆர் மோமியா வாழிய முன்னிலை யசை பத்தே முத்து. ஒ. 20 இகு மியா இக மதி மோ சின் முன்னிலை அசைச் சொல் என்மனார் அறிந்திசி னோரே. இளம். உரை : முன்னிலைக்கண் அசைச்சொல்லாய்வருவன இவை, எ-று. வ-று : மியா : கேண்மியா இக : ‘தண்டுறை யூர யாங்கண்டிக’ மோ : காமஞ் செப்பாது கண்டது மொழிமோ’ மதி : ‘சென்மதி பெரும’ இகும் : ‘மெல்லம் புலம்ப கண்டுகும் யாமே’ சின் : ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை’ (அகம்7) சேனா : இ-ள் : மியா முதலாகிய ஆறும் முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசைச் சொல்லாம், எ-று. |