சொல்லதிகாரம் - இடையியல்119

உ-ம் : கேண்மியா, சென்மியா எனவும், ‘கண்பனி யான்றிக வென்றி
தோழி’  எனவும்,  ‘காமஞ்  செப்பாது  கண்டது மொழிமோ’  (குறுந்.2)
எனவும்,  ‘உரை  மதி  வாழி  யோ வலவ’ எனவும், ‘மெல்லம்  புலம்ப
கண்டிகும்’  எனவும், ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை’   (அகம்.
7) எனவும் வரும்.

தெய்.

இ-ள் : இவையாறு  சொல்லும்   முன்னிலை  வினைச்  சொற்கண்
அசைநிலையாகிவரும், எ-று.

உ-ம் : கேண்மியா, ‘தண்டுறை யூரயாம் கண்டிக’, ‘காமஞ் செப்பாது
கண்டது   மொழிமோ’  (குறுந்.2)  சென்மதி பெரும’, ‘மெல்லம் புலம்ப
கண்டிகும்’,   ‘காப்பும்  பூண்டிசிற்  கடையும் போகலை’ (அகம்.7)  என
வரும்.  இவை   கேள்,  காண்,  மொழி,  செல், காண், பூண்  என்னும்
பொருட்கண் ஆய் என்பது திரிந்து வந்தன.

நச்.

இதுவுமது.

இ-ள் : மியா  இக    மோ   மதி  இகும் சின் என்னும் ஆவயின்
ஆறும்-மியா  இக  மோ  மதி  இகும்  சின்   என்று சொல்லப் பட்ட
அவ்விடத்து  இடைச்  சொல்  ஆறும்,   முன்னிலை அசைச் சொல் -
முன்னிலைப் பொருளையுணர்த்தும் அசைச் சொல்லாம், எ-று.

உ-ம் : கேண்மியா, சென்மியா  எனவும், கண்பனி யான்றிக என்றி
தோழி’   எனவும்,  ‘காமஞ்  செப்பாது  கண்டது மொழிமோ’ எனவும்,
‘உரைமதி  வாழியோ  வலவ’  எனவும்,  ‘மெல்லம் புலம்ப  கண்டிகும்’
எனவும், ‘காப்பும் பூண்டிசின் கடையும் போகலை’ எனவும் வரும்.

கல்.

1 என்பது என்னுதலிற்றோ வெனின். . . . . .
. . . . . . . . . . . . . . . . . யூர் கண்டி.
காமம் செப்பாது கண்டது மொழிமோ. . . 
சென்மதி. . . . .
இகும்-மெல்லம் புலம்ப கண்டிகும்
சின் காப்பும் பூண்டிசிற் கடையும் போகல்


1. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் பதிப்பில் உள்ள பகுதியிது. கழகப்
பதிப்பில் இல்லை.