சொல், நூற்றிருபத்தொன்றாம் பாடலில் கண்டுளேம் எனத் தன்மைப்பன்மையில் இறந்த காலமாக வந்துளது தவிர, மற்றையவிடங்களில் ‘காண்பாயாக’ என முன்னிலை யேவற் பொருளிலேயே வந்துளது. அங்கெல்லாம் எதிர்காலம் காட்டும். கண்டிசின் என்பதைக் காண் + இசின் எனப் பிரிக்கலாம். இவ்விடைச்சொல் பெருவழக்காக முன்னிலையிலேயே காணப்படுதலின் அதாவது கண்டிசின், என்றிசின், கேட்டிசின், உரைத்திசின், வந்திசின் என்பதுபோலக் காணப்படுதலின் இசின் என்பதினும் சின் என்றே பிரிக்கலாம். கண்டி+சின், என்றி+சின், கேட்டி+சின், உரைத்தி+சின், வந்தி+சின் என்றே பிரிக்கலாம். ஏன் எனின் கண்டி, என்றி முதலியன முன்னிலைக்குரிய இகர வீற்றவாய்க் காண்பாய், என்பாய் முதலியவாக முன்னிலைப் பொருளை யுணர்த்துவதால் என்க. என்றிசின் யான், அறிந்திசினோர் என்னும் தன்மை, படர்க்கை இடங்களில் என்ற்+இசின், அறிந்த்+இசின் எனப் பிரித்தற் கேற்ப அச்சொற்கள் அமைந்திருக்கின்றன. பெருவழக்காக அமைந்த முன்னிலையிடத்தைக் கருதி ஆசிரியர் இசின் எனக் கொள்ளாமல் சின் எனக் கொண்டார் என்னலாம். அடுத்து, “இகுமும் சின்னும் ஏனையிடத்தொடுந். தகுநிலையுடைய” என்றதோ டமையாது “என்மனார் புலவர்” என்றுகூறிச் சின் எனக் கொண்டனர் முன்னோர் என்பதையும் அதுவே தம் கருத்து என்பதையும் புலப்படுத்தினார். கண்டிசின், என்றிசின் முதலியன காண்பாய் என்பாய் போல எதிர்காலத்தில் வழங்கப்படுதலினாலும், அறிந்தி சினோர் என்பது அறிந்து எனப் பிரிக்கப்படாமல் அறிந்த்+இசின்+ஓர் எனப் பிரிக்கப்படுதலினாலும் இறந்த கால வினை யெச்சங்களுடன் இசின் இணைந்ததாக இசரயேல் கூறுவது மேலும் ஆராயத் தக்கதாகும். |