ஆ.மொ. இல. Of them ‘ikum’ and ‘sin’ have the suitability of joining other persons also - the scholars say. ஆல். Scholars tell us that among these /ikum/ and / sin/ may appear rightly with the other persons also. பி.இ. நூ. முத்து. ஒ. 22. இகும் சினும் ஏனையிடத்தொடும் சிவணும். இளம். வ-று : இகும் தன்மைக்கண் வருமாறு: ‘கண்டிகும் அல்லமோ கொண்க’ (ஐங்குறு. 121) எனவரும். படர்க்கை: ‘புகழ்ந்திகு மல்லரோ பெரிதே’ எனவரும். சின் தன்மைக்கண் வருமாறு: ‘கண்ணும் படுமோ என்றிசின்யானே’ (நற். 61) என வரும். படர்க்கைக்கண் வருமாறு; ‘யாரஃதறிந்திசினோரே’ (குறுந்.18 ) என வரும். சேனா. இ-ள் ; மேற்கூறப்பட்ட ஆறனுள் இகுமும் சின்னும் படர்க்கைச் சொல்லோடுந் தன்மைச் சொல்லோடும் பொருந்து நிலையுடையவென எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தவாறு. உ-ம் ; ‘கண்டிகுமல்லமோ’ (ஐங். 121) எனவும், ‘கண்ணும்படுமோ என்றிசின்யானே’ (நற்.61) எனவும் தன்மைக்கண் வந்தன. ‘புகழ்ந்திகு மல்லரோ பெரிதே’ எனவும் ‘யாரஃதறிந்திசினோரே’ (குறுந்.18) எனவும் படர்க்கைக்கண் வந்தன. தெய். எய்தியதன் மேற் சிறப்புவிதி வகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : மேற் சொல்லப்பட்டவற்றுள் இகுமும் சின்னும் தன்மையினும் படர்க்கையினும் வருதல் தகுநிலையுடைய வென்று சொல்லுவர், எ-று. |