உ-ம் :‘கண்டிகுமல்லமோ’, கண்ணும் படுமோ என்றிசின்யானே’ இவை கண்டேம், என்றேன் என்னும் பொருட்கண் வந்தன. புகழ்ந்திகு மல்லரோ பெரிதே-பாடல் சான்ற விறல் வேந்தனும்மே’, ‘ வெப்புடைய வரண்கடந்து துப்புறுவர்புறம் பெற்றிசினே’ இவை புகழ்ந்தார், பெற்றாண் என்னும் பொருட்கண் வந்தன. ‘யாரஃதறிந்திசினோரே’ எனப்பால் காட்டும் எழுத்தோடு அடுத்து வருதலும் கொள்க. நச் இதுமேலதற்குப் புறனடை கூறுகின்றது. இ-ள் : அவற்றுள் இகுமும் சின்னும் - முற்கூறிய ஆறனுள் இகுமும் சின்னும், ஏனையிடத்தொடும் தகுநிலை உடைய என்மனார் புலவர் - ஒழிந்த தன்மைச் சொல்லோடும் படர்க்கைச்சொல்லோடும் பொருந்தும் நிலைமையுடைய என்று கூறுவர் புலவர், எ-று. உ-ம் : கண்டிகு மல்லமோ’, கண்ணும்படுமோ என்றிசின் யானே’ எனத் தன்மைக் கண்ணும்: புக்ழ்ந்திகு மல்லரோ பெரிதே’ ‘யாரஃதறிந்திசினோரே’ எனப் படர்க்கைக் கண்ணும் வந்தன. முருகாற்றுப் படையுள் 1 ‘விளிவின், றிருள்நிற முந்நீர் வளைஇய வுலகத்து ஒருநீயாகித் தோன்ற விழுமிய, பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன். . . மலைகிழவோனே’ என மதி படர்க்கைக் கண்ணும் வந்ததனைத் ‘தகுநிலையுடைய’ என்ற தனானாதல் ‘அவ்வச் சொல்லிற் கவையவை’ (இடை. 47) என்னுஞ்சூத்திரத்தா னாதல் அமைத்துக்கொள்க. அன்றி, ‘மதியை அறிவாக்கிப் பல அறிவுடனே நீஒருவனேயாகப் பரிசில் நல்கும்’ எனப் பொருள் கூறுவாரும் உளர். ‘ஊனு மூணு முனையின்’ என்னும் புறப்பாட்டினுள் சென்மோ பெரும எம் விழவுடை நாட்டென’ என்பதனையும் தன்மைக் கண்மோ வரும்என இவ்வாறு அமைத்தலும் ஒன்று. அன்றிப் பெரும எம் விழைவுடை நாட்டே நீ செல் என்று
1. பொருள்: இருண்ட நிறத்தையுடைய கடல்சூழ்ந்த உலகத்திடத்தே நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரியையாய்க் கேடின்றித் தோற்றும்படிச் சீரிய பிறராற் பெறுதற்கரிய வீடு பேற்றினைத் தருவன். (பலவுடன் என்பது அடுத்தவரியுடன் தொடர்வது.) |