சொல்லதிகாரம் - இடையியல்126

உ-ம்: அம்மவாழி தோழி (ஐங். 31) எனவரும்.

மியா இக முதலாகிய அசைநிலை ஒரு பொருள் உணர்த்தாவாயினும்
முன்னிலைக்கண்  அல்லது வாராமையான் அவ்விடம் உணர்விக்குமாறு
போல,   அம்ம   என்பதூஉம்   ஒரு  பொருள்  உணர்த்தாதாயினும்
ஒன்றனைக்  கேத்பிக்குமிடத்து  அல்லது  வாராமையான் அப்பொருள்
உணர்விக்கும் என்பது விளக்கிய ‘கேட்பிக்கும்’ என்றார்.

தெய்.

இதுவும்  அசைநிலைச்  சொல்   பொருள்படுமாறு   உணர்த்துதல்
நுதலிற்று.

இ-ள் : அம்ம என்னுஞ் சொல் அசைநிலையா  தலேயன்றிக் கேள்
என்னும் பொருளும்படும், எ-று.

உ-ம் :‘அம்ம வாழி தோழி’ (ஐங். 31) என்றவழிக் கேள் என்னும்
பொருள்குறித்து நின்றது.  ‘உண்டா  லம்ம  இவ்வுலகம்’  (புறம். 182)
என்பது அசைநிலையாகி வந்தது.

அசைநிலை என்பது  எற்றாற்  பெறுதும்  எனின்,  மேல்  ‘அம்ம
என்னும் அசைச்சொல் நீட்டம்’ (விளி. 35) என்பதனாற் பெறுதும்.

நச்.

இது பொருள்படுமாறு கூறுகின்றது.

இ-ள் : அம்ம  கேட்பிக்கும் -  அம்ம  என்னுஞ்  சொல்   யான்
கூறுகின்றதனைக்    கேள்    என்று    ஒருவர்க்குக்    கேட்பிக்கும்
பொருண்மையினை உணர்த்தி நிற்கும், எ-று.

சொல்லோடு பொருட்கு ஒற்றுமை கருதிக் கேட்பிக்கும் என்றார்.

உ-ம் : ‘அம்ம வாழி தோழி’ (ஐங். 31). ‘அம்ம  என்னும்  அசைச்
சொல்  நீட்டம்’  (விளி.  36)  என்புழியும் பொருள் தந்தே நிற்குமாறு
கூறியவாறு ஆண்டு உணர்க.

இசரயேல்

இது வியப்பு உறுதி ஆகிய பொருளிலும் வரும்.
பயனின்றம்ம இவ்வேந்துடை யவையே (நற். 90) - வியப்பு.
உண்டாலம்ம இவ்வுலகம் (புறம். 182) - உறுதி.