சொல்லதிகாரம் - இடையியல்127

சிவ.

இக்காலத்தும்     பெண்பாலரிடம் (தாய், மனைவி, மகள், பிறர்)
ஒன்றுசொல்ல   நினைப்பவன்  அருகிருந்தாலும்  அம்மா  எனக்கூறி
அவர்   என்ன  என்று  கேட்கும்போது  தான்  சொல்ல  வந்ததைச்
சொல்லுதல்  உண்டு. இதில் விளித்தல் நோக்கம் இன்றி, ‘யான் ஒன்று
சொல்வேன் கேள்’ என்று கூறுவது நோக்கமாகாதலைக் காணலாம்.

பால.

கேட்பிக்கும் - கருவி கர்த்தாவாகக் கூறப்பட்டது.

ஆங்க
 

272.

ஆங்க வுரையசை.                             (29)

(ஆங்க உரை அசை)
 

ஆ.மொ.

இல.

‘Āńga ’ serves as syllable.

ஆல்.

/āńka/ is an empty morph in prose utterances-

பி. இ. நூ.

முத்து. ஒ. 21

ஆங்க வுரையசை.

இளம்.

உரை : ஆங்க என்னும்  இடைச்சொல் கட்டுரைத் தொடர் பினிடை
அசைப் பொருள்பட வரும், எ-று,

வ-று:  ஆங்கக்
       குயிலு மயிலுங் காட்டிக் கொள
       விவனை விடுத்துப் போக்கியோள்’

என வரும்.

சேனா.

இ-ள் : ஆங்க    என்னும்      இடைச்சொல்    கட்டுரைக்கண்
அசைநிலையாய் வரும், எ-று.

உ-ம்: ‘ஆங்குக் குயிலு மயிலுங் காட்டி’ என வரும்.