சொல்லதிகாரம் - இடையியல்128

தெய்.

அசைநிலையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : ஆங்க என்னுஞ் சொல்  உரையிடத்து  அசை  நிலையாம்,
எ-று.

உ-ம்: ஆங்கக் குயிலு மயிலுங் காட்டி’ என வரும்.

நச்.

இதுவுமது.

இ-ள் : ஆங்க   உரையசை  -  ஆங்க   என்னும்  இடைச்சொல்
கட்டுரைக் கண்ணே அசைத்த நிலையாய் வரும், எ-று.

இசரயேல்.

1 ஆங்கப் பன்னிருகையும் பாற்பட  இயற்றி  (திருமுருகு 118)  -
இடம். (இடையும் உரியும் பக். 21)

கட்டுரை -புனைந்துரை. அசைத்தல் - சேர்த்தல்.

உ-ம் :‘ஆங்கக் குயிலு  மயிலுங்  காட்டிக் கேசவனை  விடுத்துப்
போக்கி யோளே’ என்புழி அங்ஙனே  எனப் புனைந்துரைத்து நின்றது.
சிறிது  பொருள்  உணர்த்துவனவற்றை   உரையசை என்றும் பொருள்
உணர்த்தாது   சொற்களை   அசைத்து   நிற்பனவற்றை  அசைநிலை
என்றும்  கூறுதல்  ஆசிரியர்  கருத்தாதலை  இரண்டு  அதிகாரத்துங்
கண்டு கொள்க.

ஆதி.

ஆங்க அசைச் சொல்லாக உரைநடையில் வரும்.
என்னை - 2சென்னைத் தமிழில் என்னாங்க.
ஆம்- சென்னைத் தமிழில் ஆமாங்க.


1. ஆங்கப் பன்னிருகை என்பதில் ஆங்க என்பது ஒரு சொல்லன்று.
ஆங்கு    அ என்னும்    இரு    சொற்களாம்.   அவ்விடத்து
அப்பன்னிருகையும் என்பது பொருள். இவ்வாறே ‘ஆங்கம் மூவிரு
முகனும்’  என  வருவதிலும்  ஆங்கு  அம் என  இரு சொற்கள்
வந்தமை காண்க.

2. சென்னைத் தமிழ் -சென்னை வாழ் மக்களின் பேச்சுத் தமிழ்.