சொல்லதிகாரம் - இடையியல்129

சிவ.

‘போம்     செல்லும்’  என்பனபோலும்   சொற்களை   உயர்வு
கருதியபோது,  ‘போங்கள், செல்லுங்கள்’ என்பனபோலக் ‘கள்’ விகுதி
சேர்த்துக்  கூறும் போது. ளகர ஒற்றின்றிப் பேச்சு வழக்கில் ‘போங்க,
செல்லுங்க’  என்பன  போலக்  கூறுதல்  உண்டு. அச்சொற்களிலுள்ள
‘ங்க’  என்பதை  என்ன, ஆம் என்பனவற்றிற் சேர்த்து உயர்வு கருதி
என்னங்க,   ஆமாங்க   (ஆம்   ஆம்   +   ங்க)  என்று  வழங்கி
வருகின்றோம்.  ஒப்போனிடத்தும்,  தாழ்ந்தோனிடத்தும் பேசும்போது
‘ங்க’  சேர்ப்பதில்லை  என்பதையும்  காணல்  வேண்டும்.  அதனால்
ஆதித்தனார் உரை ஆய்வுக்குரியதாம்.

ஒப்பில் போலி
 

273.

ஒப்பில் போலியு மப்பொருட் டாகும்.             (30)

(ஒப்பு இல் போலியும் அப் பொருட்டு ஆகும்.)
 

ஆ.மொ:

இல.

'pō1'which does not denote comparison is of the same nature.

ஆல்.

/Pō1/ when it is not used in comparisons does the same.

பி,இ. நூ.

முத்து. ஒ. 23.

ஒப்பில் போலியும் உரையசை யாகும்.

இளம்.

இச்     சூத்திரம்  என்னுதலிற்றோவெனின், மேல் இடைச் சொல்
எழுவகைய  என்று   நிறுத்தவற்றுள்   ஒப்பில்   போலி   என்னும்
இடைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று.

ஒப்பில் போலி யாவது,  ஒப்பில்லாத வழி  ஒப்பித்த  வாசகம் பட
வருவது என்பது.