வ-று: ‘மங்கலம் என்பதோர் ஊருண்டு போலும் மழ நாட்டுள்’ என ஒப்பில்லாத வழிப் போலும் என்னும் இடைச் சொல் வந்தவாறு. சேனா. இ-ள் : ஒப்புமை யுணர்த்தாத போலிச் சொல்லும் ஆங்க என்பதுபோல உரையசையாம், எ-று. உ-ம்: மங்கலம் என்பதோர் ஊருண்டு போலும் என வரும். போலும் போல்வது என்னுந் தொடக்கத்துப் பலவாய் பாடுந் தழுவுதற்குப் ‘போலி என்றார். நெருப்பழற் சேர்ந்தக் கால் நெய் போல்வதூஉம். (நாலடி.124) என்பது மது. அசை நிலையும் பொருள் குறித்தல்லது நில்லாமையின் அப்பொருட்டாகும்’ என்றார். தெய். இதுவுமது. இ-ள்: ஒப்புக் குறியாத போல் என்னும் சொல்லும் உரையசையாம், எ-று. உ-ம்: அவர் வந்தார் போலும், இதனுள் வந்தார் எனத் துணிந்த வழிவருதலின் அசைநிலையாயிற்று. நச். இதுவுமது இ-ள்: ஒப்பில் போலியும் அப்பொருட்டு ஆகும்- ஒன்றற் கொன்று ஒக்கும் என்னும் பொருள் தன்கண் இன்றி வரும் ‘போலி’ என்னும் சொல்லும் அக்கட்டுரைக் கண்ணே அசைத்த நிலையாகிய பொருளையுடைத்தாய் வரும், எ-று. அப்பொருட்டு எனவே ஆங்கவும் பொருள் தருதல்பெற்றாம். உ-ம் :‘மங்கலம் என்பதோர் ஊருண்டு போலும்,’ ‘நெருப்பழற் சேர்ந்தக்கால் நெய் போல்வதூ உம், எரிப்பச்சுட் டெவ்வ நோய் ஆக்கும்’ (நாலடி. 124) எனப் போலும் என்னும் இடைச்சொல் ஊரையும் நெய்யையும் புனைந்து நின்றவாறு காண்க. |