சொல்லதிகாரம் - இடையியல்131

சிவ.

வடார்க்காடு மாவட்டப்பகுதியினர் போல என்னும் சொல்லை அசை
நிலையில்  இன்றும்  வழங்குவர்.  நீ  சாப்பிட்டாயா என்று வினாவின்
‘சாப்பிட்டாற்  போல’ (சாப்பிட்டாப்பல)  என்று கூறுவதைக் காணலாம்.
‘நத்தம்   போற்  கேடும்’  (குறள்  235)  என்பதில்  போல்  என்பது
அசைநிலையாய்  வந்தது.  ஒப்பில்  போலி ஆதரம் (விருப்பு) இல்வழி
வரும் என்று பின் வருஞ்சூத்திரவுரையில் (31) சேனாவரையர் கூறுவர்.

அசைநிலைச் சொற்கள்.
 

274.

யாகா
பிறபிறக் கரோபோ மாதென வரூஉ
மாயேழ் சொல்லு மசைநிலைக் கிளவி.              (31)

(யாகா
பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம்
ஆ ஏழ் சொல்லும் அசைநிலைக் கிளவி)
 

ஆ.மொ:

இல.

'yā',  'kā',  'pi ra',  'pi r akku', 'pō', 'arō' and 'māthu' these seven
morphemes serves as expletives.

ஆல்.

The seven morphemes /yā/, /kā/, /pi ra/,  /pi r akku/, /pō/,/arō/,
/māthu/ are empty morphes.

பி.இ.நூ.

நன். 441

யாகா பிறபிறக்கு அரோபோ மாது இகும்
சின்குரை ஓரும் போலும் இருந்து இட்டு
அன்று ஆம் தாம் தான் கின்று நின்று அசை மொழி.

இல. வி. 277

யாகா பிறபிறக்கு அரோபோ மாதுஇகும்
சின்குரை ஓரும் போலும் இருந்து இட்டு
அன்று ஆம் தாம் தான் என் ஆல் என்ப
அன்ன பிறவும் அசைநிலை மொழியே.