தொன். 137. அத்து அந்தில் அன்று அம்ம ஆங்கு அரோ ஆம் ஆல் இட்டு இகும் குரைகா இருந்து இன்று ஓரும் சின்தம்தான் நின்று தில் பிறபிறக்கு மன்மாமன்னோ மாது யா மாதோ போலும் போம் எனப் பொது அசை முப்பதே. முத்து. ஒ. 24 யாகா பிறபிறக்கு அரோபோ மாதுஎன வரும் ஒரு ஏழும் அசைநிலை மொழியே. இளம். இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அசைக்கும் இடைச் சொற்களைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. வ-று: ‘யா பன்னிருவர் உளர் போலும் மாணாக்கர் அகத் தியனார்க்கு’ என யா வந்தவாறு காண்க. கா: உதுகா எனவரும் பிற: ‘அதுபிற, இதுபிற, உதுபிற,’ எனப் பிற வந்தவாறு ‘அதுபிறக்கு எனப் பிறக்கு’ வந்தவாறு. 1 ‘கொடியுவணத்தரோ’ என அரோ வந்தவாறு. ‘பிரியேன் வாழேன் 2 போ தெய்ய’ எனப் போ வந்தவாறு. ‘நீர்போ நேரிகை புகன்’ என்பது மது. 3 விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவென் னெஞ்சம்’ (நற் 178) என மாது வந்த வாறு, சேனா. இ-ள்: யாமுதலாகிய ஏழிடைச் சொல்லும் அசைநிலையாம், எ-று. உ-ம்: யா பன்னிருவர் மாணாக்கர் உளர் அகத்திய னார்க்கு’ எனவும், 4 புற நிழற்பட்டாளோ இவளிவட் காண்
1. உவணக் கொடியரோ எனமாறுக. உவணக்கொடி- கருடக் கொடி. 2. போ, தெய்ய - இரண்டுமே அசைநிலைகள். 3. பொருள்: அவரைத் தெளிந்த என் நெஞ்சம் அழிந்தது மாது அசைநிலை, 4. பொருள்: குடையினது நிழலின் புறத்தே இவள் அகப் பட்டாளோ? இல்லை. இவளை இவ்விடத்துக் காண், |