டிகா’ (கலி. 99) எனவும், 1 ‘தான் பிறவரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி’ (புறம்.140) எனவும், ‘அதுபிறக்கு’ எனவும், 2 ‘நோதக விருங்குயில் ஆலுமரோ’ (கலி. 33) எனவும், ‘பிரியின் வாழா தென் போ தெய்ய’எனவும், விளிந்தன்று மாதவர்த் தெளிந்த வென்னெஞ்சே’ (நற். 178) எனவும் வரும். இடம் வரையறாமையின் இவை மூன்றிடத்திற்கும் உரிய. ஆங்கவும் (இடை. 29) ஒப்பில் போலியும் (இடை. 30) உரை தொடங்குதற்கண்ணும், ஆதரம் இல்வழியும் வருதலின் வேறு கூறினார். தெய். இதுவுமது. இ-ள்: யா முதலாகச் சொல்லப்பட்ட ஏழு சொல்லும் அசைநிலைக் கிளவியாம் எ-று. உ-ம்: யா ‘தோழியா சுவர்க்கம் போக்கிங்கென்’ கா: ‘புறநிழற் பட்டாளோ இவளிவட் காண்டிகா’ பிற: ‘தான் பிற -வரிசையறிதலிற் றன்னுந் தூக்கி’ (புறம் 140) பிறக்கு: ‘நசை பிறக் கொழிய’ அரோ: ‘நோ தக, இருங்குயி லாலுமரோ’ (கலி. 33) போ: ‘பிரியன் வாழா தென் போ தெய்ய’ மாது: ‘விளிந்தன்று மாது அவர்த்தெளிந்த என் நெஞ்சே,’ (நற். 179) எனவரும். நச். இஃது அசைநிலை கூறுகின்றது. இ-ள்: யா கா பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம் ஆ ஏழ் சொல்லும் அசைநிலைக் கிளவி -யா கா பிற பிறக்கு
1. பொருள்: தான் அவரவர் சிறப்பறிதலின் தன் சிறப்பையும் ஆராய்ந்து 2. பொருள்: துன்புறும்படிக் கருங் குயில் கூவும். |