சொல்லதிகாரம் - இடையியல்134

அரோ  போ  மாது என்று  சொல்ல வருகின்ற அவ்வேழு சொல்லும்
தாஞ்  சார்ந்த  சொல்லை   அசைத்து  நிற்கும்  நிலைமையையுடைய
சொல்லாம், எ-று.

உ-ம் :  ‘யா  பன்னிருவர்  மாணாக்கர் உளர்  அகத்திய னார்க்கு’
எனவும்,  இன்னுந்  ‘தோழியா  சுவாகதம்  போது  கீங் கென’ என்று
பாடமாயின்   அதுவும்   இதற்கு  உதாரணம்.  ‘புறநிழற்  பட்டாளோ
இவளிவட்  காண்டிகா’ எனவும், ‘தான் பிற வரிசை யறிதலின் தன்னுந்
தூக்கி’  எனவும்,  1 ‘நசைதர வந்தோர் நசை பிறக் கொழிய’ (புறம்.15)
எனவும்,  ‘நோ  தக இருங்குயில் ஆலுமரோ’ எனவும், ‘பிரியன் வாழா
தென்   போ   தெய்ய’   எனவும்,   ‘விளிந்தன்று   மாது   அவர்த்
தெளிந்தவென் னெஞ்சே’ எனவும் வரும்.

பிரிவில் அசை நிலை
 

275.

ஆக வாக லென்ப தென்னு
மாவயின் மூன்றும் பிரிவி லசைநிலை               (32)

(ஆகல் ஆக என்பது என்னும்
ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை)
 

ஆ. மொ:

இல

'āka', 'ākal' and ‘enpathu’  -  these  three  are  the  syllables  of
doublets.

ஆல்:

The  three |āka|, |ākal| and | enpatu|  are  non-separable  empty
morphes.

பி.இ.நூ.

முத்து. ஒ. 25.

ஆக ஆகல் பிரிவில் அசைநிலை.

இளம்.

வ-று: ‘ நீ இன்னை,  இனையை’ என்று ஒருவனை ஒருவன் ஒன்று
சொல்லுமிடத்து, ‘அமையும் அமையும்’, ‘ஆக ஆக’


1. பொருள்:  விருப்பம் உந்தவந்தோரின் அவ்விருப்பம் கெட.