சொல்லதிகாரம் - இடையியல்137

அண்ணனாதல்  தம்பியாதல் உறவு யாருமில்லை - அசை ‘கொலை
என்பது  யான் அறியாத ஒன்று’ - என்பது பகுதிப் பொருள் விகுதி -
அசை.

புறம்    187  அமைப்பு முறை: நாடு ஆக காடு ஆக அவள் ஆக
மிசை  ஆக,  யாண்டு  ஆடவர்  நல்லவர். ஆண்டு நல்லைநீ வாழிய
உலகே -ஆக எல்லாம் அசைநிலை ஆனமை காண்க.

கம்பர் உருக் காட்டுப்படலம் 27 அமைப்பு; - ‘அரக்கனே அமரனே
ஆக,  குரக்கினத்  தலைவனே ஆகுக, எம்பிரான் நாமம் சொன்னான்:
இஃதே  உயிர்க்கு  உறுதி.”  அரக்கன்  அசுரன்  குரக்கன்  யாவனும்
ஆகுக என ‘ஆக’ அசைநிலையாயிற்று.

முந்து     உரையாசிரியர்கள்  ஆக ஆக, ஆகல் ஆகல் என்பது
என்பது  -  என இணைந்துவரும்  என்று அதற்குக் கதை பண்ணுவர்.
அஃது  வழக்குக்கு  ஒவ்வாது. ‘பிரிவில் அசைநிலை’ என்றது பெயரை
விட்டுப்   பிரியா   அசைநிலை  என்பதே  பொருள்;  இரட்டையாக
நிற்குமாயின்  ‘இணைந்துவரு  அசைநிலை’  என்று கூறல் வேண்டும்.
இணைந்து வரும் அசைநிலைகளும் உண்டு.

சரிசரி பார்த்துக் கொள்கிறேன்.
ஆமாம் ஆமாம் நன்றாயிருக்கிறதே!
பார்பார் என் செய்கிறேன்
வேணும் வேணும்! உனக்கு எல்லாம்தகும்.

இவற்றைப் பிரித்து எழுதினால் தனிப்பொருள் தரும்.

சிவ.

இச்சூத்திரத்துக்கு  இளம்பூரணர் சேனாவரையர் தெய்வச் சிலையார்
ஆகியோர்,   “அம்  மூன்று  சொற்களும்  இரட்டித்துப்  பிரிதலின்றி
அசைநிலைப் பொருளில் வரும்” என்ற  கருத்துப்பட உரையெழுதினர்.
ஆனால்    உதாரணங்கள்    தந்த   வகையில்   வேறுபடுகின்றனர்.
நச்சினார்க்கினியர்,

“ஆக ஆகல் என்பது என்று சொல்லப்படும் அவ்விடத்து
மூன்றும் தாம் சார்ந்த சொற்களில் பொருள்களைப்பிரித
லின்றி உணர்த்தும் அசையிலையாம்”

என்று   உரையெழுதினர்,  ‘பிரிவில் அசைநிலை’ என்ற தொடருக்குச்
சேனாவரையர்  முதலியோர் ‘தனித்துப் பிரிந்து வழங்குதல் இல்லாமல்
இரட்டித்து  நிற்கும்  அசைநிலை’  என்றே  பொருள்  கொண்டிருக்க,
நச்சினார்க்கினியர், ‘தாம் சார்ந்த