சொற்களின் பொருளே தமக்குப் பொருளாகக் கொண்டுவரும் அசைநிலை’ என்றே பொருள் கொண்டார். உதாரணங்களாக, “காரெதிர் கானம் பாடினேமாக” “அருளா யாகலோ கொடிதே” “நடுங்கு நோய்தீர நின்குறி வாய்த்தாள் என்பதோ” என்பனவற்றைக் காட்டினார். இவற்றுள் ஒன்றேனும் அசை நிலைப் பொருளுக் குரியதாக இல்லை. பாடினேமாக’ என்பதில் பாடினேம்’ என்பதைப் ‘பாட’ என்னும் எச்சப் பொருட்டாக்கியது ‘ஆக’ என்னும் இடைச்சொல் எனவே, தான் சார்ந்த வினையின் பொருளே தனக்கும் பொருளாக இல்லாமல் செய என்னும் வாய்பாட்டு எச்சப் பொருளாகிய தன் பொருளே யுள்ளதாயிற்று. அன்றியும் வினைமுற்றையும தன் வயப்படுத்தியது. ‘அருளா யாகலோ கொடிதே’ என்பதிலும் ‘ஆகல்’ என்பது அசைநிலையில்லை. ‘கொடிது’ என்பதற்கு எழுவாயாகித் தனக்கெனப பொருளுடையதாயிற்று ‘வாய்த் தாள் என்பதோ’ என்ற தொடரிலும் ‘என்பது’ அசைநிலை யில்லை. ‘என்ற காரணமோ’ என்னும் பொருளுடையது அது. எனவே, நச்சினார்க்கினியர் காட்டிய உதாரணங்களில் அவை அசைநிலைப் பொருளில் வரவில்லை என்பது தெளிவு. அதனால் அவர் உரை பொருந்துவதில்லை. சேனாவரையர் அவை இரட்டித்து அசை நிலைப் பொருளில் வந்தமைக்குச் செய்யுள் மேற்கோள் காட்டவில்லை. பதிலாக, “உலக வழக்கில் ஒருவன் யான் இன்னன் என்றானும், நீ இன்னை யென்றானும். அவன் இன்னன் என்றானும், கூறியவழிக் கேட்டான் ஆக ஆக, ஆகல் ஆகல் என்னும் இவை உடன் படாமைக் கண்ணும் ஆதரம் இல் வழியும் வரும். ஒருவன் ஒன்று உரைப்பக் கேட்டான், என்பது என்னும்: அது நன்குரைத்தற் கண்ணும் இழித் தற் கண்ணும் வரும் பிறாண்டுவரினும் வழக்கு நோக்கி யுரைத்துக் கொள்க.” என்றெழுதினார். இவ்வழக்கு இக்காலத்தில்லை. என்றாலும் இரட்டித்து வந்த இடங்களில் ஒவ்வோர் வகையான் உட்கோள் இருத்தலின் அவையும் பொருள் தந்தனவேயாம்: அசை எனப் படா. எனவே சேனாவரையர் அவை இரட்டித்து வரும் என்று கொண்டு காட்டிய உதாரணம் தவறுடையனவாம். இனி இளம்பூரணர் காட்டிய “நீ இன்னை இனையை...... கண்டு கொள்க,” “யான் உனக்கு...... வந்தவாறு காண்க,” “ஒருவனையொருவன்........ அறிந்து கொள்க” எனக்காட்டிய |