சொல்லதிகாரம் - இடையியல்141

என்றோ ஆகல் ஆகல்!  என்றோ  கூறுவான்.  அவற்றுள் ஒரு சொல்
அங்ஙனம் ஆவதாக  என்னும் பொருள்தர ஏனையது  அசைநிலையாக
நின்றவாறு காண்க.

ஒருவன் நல்லாறு   எனினும்  கொளல்தீது   என்றவழி   அதனை
வலியுறுத்தும்  ஒருவன்,  ‘என்பது  என்பது’  என்னும்.  ஆண்டு  ஒரு
சொல்,  ‘என்று  சொல்லுதல் தகவது’ என்னும்  பொருள்தர, ஏனையது
அசைநிலையாய் நிற்றலைக்காண்க.

பொருள் நிலைச்  சொல்லும்.   அசைநிலைச்  சொல்லும்  வடிவான்
ஒற்றுமைப் பட்டு நிற்றலின் பிரிவில் அசைநிலை என்றார்.

இவற்றை அடுக்கெனக்  கொள்ளலாம்   எனின்   அடுக்கி   வரும்
சொற்கள் பொருளுணர்த்தியல்லது அசை நிலையாக வாரா என்க.

இச்சூத்திரத்திற்கு உரையாசிரியன்மார் கூறும்  உரையும் விளக்கமும்
அவரவர் கருத்துக்கட்கே முரண்படுதலின் ஒவ்வாமையறியலாம்.

ஒள
 

276.

ஈரள பிசைக்கு மிறுதியி லுயிரே
யாயிய னிலையுங் காலத் தானு
மளபெடை நிலையுங் காலத் தானு
மளபெடை யின்றித் தான் வருங் காலையு

முளவெனமொழிப பொருள்வேறு படுதல்
குறிப்பி னிசையா னெறிபடத் தோன்றும்           (33)

(ஈர் அளபு இசைக்கும் இறுதி இல் உயிரே
ஆ இயல் நிலையும் காலத் தானும்
அளபெடை நிலையும் காலத் தானும்
அளபெடை இன்றித் தான்வரும் காலையும்
உள என மொழிப பொருள்வேறு படுதல்
குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும்)
 

ஆ. மொ:

இல.

When a vowel (‘au’)  having  two and not standing in the
final  syllable  of  a word appears in one word of a doublet
without  the  lengthened  sound,  a  difference  in  sense is
denoted  and  snch  difference  can be understood from the
tone of the speaker