ஆல். When that vowel of a double measure which does not take the final position, occurs in this way, as it occurs in the elongated form or as it occurs with out the elongation by itself, the meaning of the utterance may change and this can be understood by the tone of the speaker. இளம். இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஒள என்னும் இடைச்சொல் மூன்று வகையாற் பொருள் படும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. வ-று : ஆயியல் நிலையும் காலத்தால் வருதலாவது, 1 மேற் கூறிய மூன்றும் போல் வருதல். ஒன்று உரைக்குங்கால் இரட்டித்து ‘ஒளஒள’ என வரும். அளபெடை நிலையும் காலத்தில் வந்து அது பொருள்படுமாறு’ ஒளஉ’ என வரும். யாதானும் ஒரு துன்புறவின்கண் அளபெடையின்றித் தான் வருமாறு: ‘ஒள’ என ஒரு குறிப்புப் பொருட்கண் வருவது என்றவாறு. இவை மூன்று பொருட் பகுதியும் குறிப்பினான் வேறு படுத்து அறிந்து கொள்க. சேனா. இ-ள் : இரண்டு மாத்திரை யுடைத்தாய மொழிக்கு ஈறாகாது எனப்பட்ட ஒளகாரம்,பிரிவில் அசைநிலை என மேற்கூறப்பட்டனபோல இரட்டித்து நிற்குமிடத்தும்,இரட்டியாதும் அளபெடையாய் நிற்குமிடத்தும், அளபெடையின்றித் தான் வருமிடத்தும் பொருள்வேறு படுதலுள அப்பொருள் வேறுபாடு சொல்வான் குறிப்பிற்குத் தகும் ஓசை வேறுபாட்டாற் புலப்படும், எ-று. பொருள் வேறுபாடாவன, வழக்கு நோக்கச் சிறப்பும் மாறுபாடும் ஆம். உ-ம் :‘ஒள ஒள ஒருவன் தவஞ் செய்தவாறு’ என்ற வழிச் சிறப்புத் தோன்றும். ஒரு தொழில் செய்வானை ‘ஒள
1. மேற்கூறிய மூன்று: ஆக, ஆகல், என்பது என்பன. |