சொல்லதிகாரம் - இடையியல்143

ஒள இனிச் சாலும்’ என்ற வழி  மாறுபாடு  தோன்றும்.  ஒளஉ ஒருவன்
இரவலர்க்  கீந்தவாறு’, ‘ஒளஉ  இனி  வெகுளல்’   எனவும் ‘ஒளவவன்
முயலுமாறு’, ‘ஒளவினித்  தட்டுப்  புடையல்’  எனவும்  அளபெடுத்தும் அளபெடாதும்  வந்தவழியும்  அப்பொருள்    தோன்றியவாறு  கண்டு
கொள்க. 1  இதனை  இக்காலத்து  ஓகாரமாக  வழங்குப.  பிறபொருள்
படுமாயினும் அறிந்து கொள்க.

‘ஈரள பிசைக்கும்’  என்றே  யொழியின் நெட்டெழுத் தெல்லாவற்று
மேலும்,  ‘இறுதியில்  உயிர்’ என்றே யொழியின் எகர ஒகரத்து மேலும்
சேறலான் ‘ஈரள பிசைக்கும் இறுதியில் உயிர்’ என்றார்.

இது  தத்தங்    குறிப்பிற்    பொருள்   செய்வதாயினும்    அடுக்கி
வருதலுடைமையான் ஈண்டு வைத்தார்.

தெய்.

ஒரு சார் இடைச்சொற் பொருள் உணர்த்துதல் நுதலிற்று,

இ-ள்: இரண்டு    மாத்திரையாகி     யொலிக்கும்    உயிர்களுள்
இறுதியாகிய  ஒளகாரம்  அல்லாத  உயிர்கள்  மேற்கூறியவாறு போல
இரட்டித்து    வருங்   காலத்தினும்   அளபெடை   பெற்று   வருங்
காலத்தினும்,  தனி  வருங்  காலத்தினும்  பொருள் வேறுபடுதல்  உள
என்று  சொல்லுவர் ஆசிரியர்: அவை ஒரு பொருள் உணர்த்தும் வழி
ஓசையானும், குறிப்பானும் பொருள் உணர்த்தும். எ-று.

உ-ம் :அவையாவன:   ஆ ஈ  ஊ  ஏ ஐ ஓ  என்பன.  ஒருவன்
தகுதியல்லாத செய்த வழியும், அரியன செய்த வழியும் ஆக ஆ என்ப.
வியப்புள   வழியும்   தும்பமுள  வழியும்  ஆ  அ  என்ப;  தமக்கு
இசைவில்லாதது  ஒன்றை  ஒருவன் சொன்ன  வழி அதனை மறுப்பார்
ஆ என்ப. ஈ என்ற வழி அருவருத்தலை  யுணர்த்தும், ஊஉ இசைவை
யுணர்த்தும்.  ‘ஏஎ  இஃதொத்தன்’  (கலி.  62) என்றவழி  இகழ்ச்சியை
உணர்த்தும். ஏஎ யென இறைஞ்சியோளே’ என்ற வழி நாணங் குறித்து
நின்றது.   ஐஐ  என்ற  வழி  இசைவை  யுணர்த்தும்.  ‘ஓஒ  உவமை
உறழ்வின்றி ஒத்ததே’ (கள வழி. 36) என்றவழி மிகுதியை யுணர்த்தும்,


1. ஓகாரமாக வழங்குதல்: ஒஓ ஒருவன்  தவஞ்  செய்தவாறு. ஓஓ
இனிச் சாலும்.