சொல்லதிகாரம் - இடையியல்146

உரையாசிரியர்,  சேனாவரையர்   இவ்விருவர்   மதமும்   ஒன்றே.
நச்சினார்க்கினியர்   மதம்வேறு:   தெய்வச்சிலையார்   மதம்   வேறு.
நச்சினார்க்கினியர் கூறும் கௌவும் வௌவும் இடைச்  சொல்லா? கௌ
இடைச்  சொல்லாயின்  ‘ஒளகார  இறுதிப்  பெயர்  நிலை   முன்னர்’
(உயிர்ம.  93)  என்னுஞ்  சூத்திரத்தில் ‘கௌ’  என்பதைப்  பெயராகக்
கொண்டு ‘கௌவுக் கடிது’ முதலிய உதாரணங்கள் கொடுத்தது எவ்வாறு
பொருந்தும்?  ‘அளபெடை  நிலையும்’  என்பதற்கும்  ‘தான்   வரும்’
என்பதற்கும்   எழுவாய்   ஈரள   பிசைக்கும்    இறுதியில்  உயிரா?
ஆயியனிலையும் காலத்துள்ள ஈரள  பிசைக்கும்  இறுதியில் உயிராயின்
சூத்திரப் போக்குக்கு அது பொருந்துமா? 

இராம-சுந்தரம்

ஈரளபிசைக்கும் இறுதியில் உயிர் ஓகாரமா அல்லது ஒழிந்த ஏனைய
ஆறுமா?.......சேனாவரையர்   கருத்துக்கான    மறுப்பைக்   கூறுவதே
தெய்வச்சிலையார் கருத்துக்கு ஆதரவு ஆகிவிடுகிறது.

மறுப்பு.

1. ஈரளபிசைக்கும்  இறுதியில்  உயிர் ‘ஒள’ என்பது  தொல்காப்பிய
விதிகளுக்கு  உடன்பாடன்று.  தொல்  எழுத்து  69-இல்   “ஒள உயிர்
எஞ்சிய இறுதியாகும்” என உரைக்கின்ற ஆசிரியரே  அடுத்த 70 ஆம்
நூற்பாவில்  “கவவோடியையின்  ஒளவுமாகும்” என்கிறார்.  கௌ,வௌ
என   இரண்டு  சொற்களை  அதற்குக்  காட்டாக   உரையாசிரியர்கள்
தருவர். எனவே, தொல்காப்பியருக்கு ஒள இறுதியில் வருவது  இரண்டு
சொற்களில்தான்   என்றாலும்-உடன்   பாடு  என்றே   தோன்றுகிறது.
இப்படியான  வரையறை வேறு சில  எழுத்துகளுக்கும் உண்டு.  மேலும்
உயிர் மயங்கியல் கடைசி நூற்பாவில் “ஒள கார இறுதிப்  பெயர் நிலை
முன்னர்”    என்று     குறித்தும்   புணர்ச்சி    விதி   கூறுகின்றார்.
அப்புணர்ச்சியின்   போது   உகரம்    இடைவருதல்  சிறப்பு  என்று
குறிப்புத்தந்தாலும்  உகரம்  இன்றியும் வரும்  என்பது  தெரியும். எ-டு:
கௌவுக்கடிது,  கௌக்  கடிது.  ஆகவே.  ஒளகாரம்  மொழியிறுதியில்
வாராது  என்று  விலக்கமுடியாது.  இதனால்  சேனாவரையர்  கருத்து
இங்குச் சிதைவுறுகிறது எனலாம். தெய்வச்சிலையர் இச்சூத்