சொல்லதிகாரம் - இடையியல்148

யிலுள்ள  ‘உளவென  மொழிப   பொருள்   வேறு   படுதல்’ என்பது
உயிர்  என்பதை  எழுவாயாகக்  கொள்ளும்.  ‘என  மொழிப’ என்பது
பிறர்  கூற்று. அதை நீக்கி ‘உயிர்.......பொருள் வேறு  படுதல் உள’ என
மாற்றிக்  கொண்டால்,  ‘பொருள் வேறுபடுதல் உள’  என்கிற தொடர்ப்
பயனிலை பன்மையாக இருப்பதால் எழுவாயும்  பன்மையாக  வேண்டும்
எனலாம்.  சேனா  வரையர்  கருதுவது   போல  ஒளகாரம்  மட்டுமே
என்றால்  ஒருமை  பன்மை  மயக்கம்   ஏற்படும். ‘ஒளகாரம்...பொருள்
வேறு படுதல் உள’ என்பதைவிட ‘உயிர்கள்  வேறு படுதல் உள’ எனத்
தெய்வச்சிலையார் எழுதுவது இலக்கணத் தவறின்றிக் காணப்படுகிறது. 

மேலே  காட்டிய   மூன்று   காரணங்களால்   இச்சூத்திரத்துக்குத்
தெய்வச்சிலையார்    கண்ட    பொருளே    ஏற்புடையது   என்பது
தெளிவாகும்.   வழக்கும்    செய்யுளும்   நாடி  இலக்கணம்  எழுதிய
தொல்காப்பியரின் சிந்தனைப் பரப்பும்  சிறப்பும் தெரிய இவ்வுரை ஒரு
உரைகல். (லண்டன் தமிழ்ச்சங்க ஆண்டு மலர். 1975-76. பக்.37-39.) 

வை.தங்கமணி. 

1 இடையியலில்  ஏ.ஓ என்ற எழுத்துகளுக்கு முன்னும் பின்னுமாய்ப்
பற்பல   நூற்பாக்களுள்   (7,9,13,34)   இலக்கணம்   கூறியிருத்தலான்
ஈண்டுக்  கூறியது ஒளகாரம் என்று கோடலே  சாலச்  சிறந்தது. மேலும்
‘இறுதியில்   உயிர்கள்’  என்று  கூறாது  ‘இறுதியில்  உயிரே’  என்று
தேற்றேகாரம் கொடுத்திருப்பதாலும் மொழியிறுதியில் வாராத ஒளகாரம்
என்று அறுதியிட்டுக் கூறலாம்.

சிவ.

இச்சூத்திரம் பற்றி மூன்று வகையான கருத்துகள் உள.
ஒளகார இடைச்சொல் பற்றியது என்பது ஒன்று.
ஆ ஈ ஊ ஏ ஐ ஒ பற்றியது என்பது ஒன்று.
கௌ வௌ பற்றியது என்பது ஒன்று.

ஒளகார  இடைச்சொல்   பற்றியது   என்பதற்கேற்ப இச்சூத்திரத்து
முதலடிக்கு “இரண்டளபு இசைக்கக்கூடிய


1. டாக்டர் ஏ.என்  பெருமாள்  மூலம்  அனுப்பி  வைக்கப்  பெற்ற
கட்டுரையில் கண்ட கருத்து இது. இக்கருத்து பிறரும் கூறியதே.