சொல்லதிகாரம் - இடையியல்6

சொல்  என்றும்  குறியீடு  பெற்று நிற்கும். இடைச்  சொற்கள் புணராத
நிலையில்  முதனிலைகளைப்   பெயர்ச்சொல்  வினைச்  சொல்  எனக்
கூறுதலும்  அவற்றை  இடமாகக்  கொண்டு இடைச் சொற்கள் தோன்றி
வரும்    என்பதும்   மொழி    இயல்புக்கும்   இந்நூல்    நெறிக்கும்
பொருந்தாமையறிக.  பிற   விளக்கங்களை  உரியியல் உரையுட் கண்டு
கொள்க.

அதனானன்றே   ஆசிரியர்   பெயரினும்   வினையினும்    நடை
பெற்றியலும்      என்னாது      “பெயரொடும்      வினையொடும்”
நடைபெற்றியலும் என உடனிகழ்வதாக ஓதுவாராயினர் என்க.

இடையியல்

இடைச் சொற் பொது இலக்கணம்
 

2244.

இடையெனப்  1 படுப பெயரொடும் வினையொடு
நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே.             (1)
2
 

(இடை எனப்படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் தமக்கு இயல்பு இல ஏ)
 

ஆங்கில மொழிபெயர்ப்பு.

இலக்குவனார்.

The morphemes are to be used alongwith the nouns and
verbs They have no independent existence.

ஆல்பெர்ட்.

Bound morphemes occur along with nouns and verbs;they
do not occur independently.

பிற்கால இலக்கண நூல்கள்.

நன்னூல். 420.

................................
பெயரினும் வினையினும்...
ஓன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல்


1. படுவ-பாடம்

2. சூத்திரத்    தொடக்கத்தில்    உள்ள   எண்  தொல்காப்பியச்
சொல்லதிகாரத்  தொடர்  எண்;  சூத்திரத்தின் இறுதியில் உள்ள
எண் இடையியல் தொடர் எண்.