சொல்லதிகாரம் - இடையியல்151

வரலாறு : “ஒள  ஒள இவன்  தவஞ் செய்தவாறு”  என்னுமிடத்து
வியப்பும்,  “ஒள   இவன் போர் செய்தவாறு” என்புழிச் சிறப்பும், “ஒள
இனி   வெகுளல்”    என்னுமிடத்து    மாறுபாடும்  குறிப்பாலுணர்த்தி
நிற்குமாறு அறிக. பிறபொருள் குறித்து வருமேனும் கண்டு கொள்க.

இவ் ஒளகாரமே இக்காலத்து ஓகாரமாக விளங்குகின்றது போலும்.

குறிப்பாற் பொருளுணர்த்துவன.
 

277.

நன்றீற் றேயு மன்றீற் றேயு
மந்தீற் றோவு மன்னீற் றோவு
மன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும்.          (34)

(நன்று ஈற்று ஏயும் அன்று ஈற்று ஏயும்
அந்துஈற்று ஓவும் அன்ஈற்று ஓவும
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்)
 

ஆ.மொ.

இல.

'ē' standing as final of 'nanŗu'
'ē' standing as final of 'anŗu'
'ō' standing as final of 'anthu'
'ō' standing as final of ‘an’
And such others which appear in doublets
denote the senses of what they stand for
by the variation of tone.

ஆல்.

/ē/ at the final position in /naru/,
/ē/ at the final position in /anŗu/,
/ō/ at the final position in /antu/ and
/ō/ at the final position in /an/ and
similar ones convey their meaning
by the tone expressed.

இளம்.

இதுவும் சொல்லுதற்  குறிப்பினால்  பொருள்  வேறுபடும்  இடைச்
சொற்களை உணர்த்துதல் நுதலிற்று.